Header Ads



நாட்டை முஸ்லீம்கள் கைப்பற்றி விடுவார்களோ என்ற அச்சம்

(நஷ்ஹத் அனா)

நாட்டில் முஸ்லீம்களின் பள்ளி வாயல்கள் அதிகரிப்பதனால் இந்த நாட்டை முஸ்லீம்கள் கைப்பற்றி விடுவார்களோ என்ற அச்சத்தில் இன்று சில குழுக்கள் முஸ்லீம்களுக்கு எதிரான செயற்பாடுகளில் களம் இறங்கியுள்ளனர். இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் ஒரு போதும் அவ்வாரான செயற்பாடுகளுக்குச் செல்லமாட்டார்கள் என்று அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ். ஹாறூன் (ஸஹ்வி) தெரிவித்தார்.

இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்தும் நோக்கில் அல்-கிம்மா நிறுவனமும் வாழைச்சேனை பொலிஸாரும் இணைந்து நடாத்திய இப்தார் நிகழ்வு (07.08.2013) இடம் பெற்ற போது அதில் சிறப்புப் பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார்.அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

முஸ்லீம்கள் நாட்டிற்கு காலா காலமாக விசுவாசமாகத்தான் இருந்து வந்துள்ளார்கள். தாய் நாடடிற்கு விசுவாசமாக இருக்கும்படி மார்க்கம் கூறியதை ஏற்று நடந்த வரலாறுகள்தான் அதிகம். முஸ்லீம்கள் பள்ளி கட்டுகின்றார்கள் பள்ளிவாயல்களின் எண்ணிக்கைகள் அதிகரிக்கின்றன என்று யாரும் பயப்படத் தேவையில்லை. பிற சமயத்தவர்களின் வணக்க வழிபாடுகளுக்கும் முஸ்லிம்களின் தொழுகைக்கும் பாரிய வேறுபாடு உள்ளது. இஸ்லாமியர்கள் கண்டிப்பாக ஒரு நாளைக்கு ஜந்து தடவை குறித்த நேரத்தில் கூட்டாக தங்களது தொழுகைகளை நிறைவேற்ற வேண்டும் அதற்காகத்தான் முஸ்லீம்கள் செரிந்து வாழும் பகுதிகளில் பல பள்ளி வாயல்கள் அமைக்கப்படுகின்றதே ஓழிய வேறு எந்ந நோக்கமும் கிடையாது இதை சகோதர சமுகத்தினர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு பிரதேசத்தில் உள்ள ஒட்டு மொத்த இஸ்லாமியர்களும் ஒரே பள்ளிவாயலில் தொழுகை புரிவதென்றால் சாத்தியமற்றது. இது ஆரோக்கிய சாந்தமுள்ள அனைவருக்கும் நன்கு புரியும். முஸ்லீம்கள் எதற்கும் ஆசைப்படாதவர்கள் மார்க்கம் சொன்னபடி தங்களது வாழ்க்கையை நடாத்துபவர்கள். இஸ்லாமியர்களுக்கு மையவாடிகள் கூட பெரியளவில் தேவையில்லை ஏனெனில் மரணித்ததன் பின்னர் அடக்கம் செய்யும் மையவாடி கூட இரண்டு வருடமோ அல்லது மூன்று வருடத்தின் பின்னர் அந்த இடத்தில் வேறு மரணிக்கும் ஒருவர் அடக்கம் செய்யப்படுவார் மையவாடியில் அடக்கம் செய்யும் இடம் கூட முஸ்லீமுக்கு சொந்தமில்லை அவ்வாரு இருக்க பள்ளிவாயலை அமைத்து நாட்டைக் கைப்பற்றப் போகிறார்கள் என்று நடக்காத ஒரு விடயத்தை விஸ்பரூபமாக மாற்ற முனைவது தவிர்க்கப்பட வேண்டும்.

முஸ்லீம்களின் வரலாறுகளை எடுத்துப் பார்த்தால் தெரியும் முஸ்லீம்கள் தாமாக சன்டைக்குப் போன வரலாறு கிடையாது முஸ்லீம்கள் ஜிகாத் செய்துள்ளார்கள் அந்த ஜிகாத் இஸ்லாத்திற்காக இஸ்லாத்தை அழிக்க வேண்டும் என்று புறப்பட்டவர்களுக்கு எதிராக நடத்தப்பட்டதே ஓழிய வேறு ஒன்றும் இல்லை. முஸ்லீம்களுக்கு எதிராக இன்று நாட்டில் பிரச்சினைகளை உருவாக்குபர்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தில் போதிய தெளிவு இல்லாமையே காரணம் என்று நான் கருதுகிறேன். அவ்வாறு அவர்கள் விளங்கிக் கொள்வதற்கு சினிமாக்களும் ஒரு சில மீடியாக்களுமே காரணமாக அமைந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

முஸ்லிமாக வேடம்பூண்டு நடிக்கும் ஒருவர் தீவிரவாதியாகவும், ஆயுததாரியாகவும் நடிப்பதால், ஏனைய இனங்களை மதிக்கத் தெரியாதவர்களாகவும் என்றும் சினிமாவில் காட்டுவதால் முஸ்லீம்களோடு பழகாத பிரமதச் சகோதரர்கள் முஸ்லீம்கள் என்றால் இவ்வாறுதான் இருப்பார்கள் என்று தீர்மாணித்துக்கொள்கின்றார்கள். இவ்வாறான தவரான கருத்துக்களில் இருந்து விடுபடுவதற்கும் இத்தகைய  உண்மை நிலையைப் புரிந்துகொள்வதற்கும் இனங்களுக்கிடையிலான ஒன்று கூடல் சந்தர்ப்பமாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன் என்றும் தெரிவித்தார்.

வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரத்னவின் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர கலந்து கொண்டதுடன்  வாழைச்சேனை ஸ்ரீ புத்த ஜெயந்தி விகாரை விகாராதிபதி நவனே அபேவன்ஷ லங்கார தேரோ, மற்றும் தமிழ் முஸ்லீம் வர்த்தகர்கள் பாடசாலை அதிபர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

1 comment:

Powered by Blogger.