சம்மாந்துறை பிரதேச சபையின் கவனத்திற்கு..!
(யு.எல்.எம். றியாஸ்)
சம்மாந்துறை பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட அலிவன்னியார் வீதி ஜெய்க்கா
திட்டத்தின் கீழ் கடந்த 07.04.2012ம். ஆண்டு கொன்க்ரீட் வீதியாக இரண்டு கிலோமீற்றர் தூரம் செப்பனிடும் பணிகள் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆனால் ஒருவருடமும் நான்கு மாதங்கள் கடந்தும் இவ்வீதி முழுமையாக முற்றுப்பெறாத நிலையில் அதன் வடிகான் வசதிகளின் நிர்மாணப் பணிகள் இடை நடுவில் கைவிடப்பட்ட நிலையில் பாரிய பள்ளம், குழியுமாக காணப்படுகிறது
அது மட்டுமல்லாது இவ்வீதியின் கிளை வீதிகளும் மதகு இன்றி துண்டிக்கப்பட்ட நிலையில் மக்கள் போக்குவரத்துக்கு பயன்படாமல் காணப்படுகிறது.
இதேவளை வடிகானுக்காக தோண்டப்பட்ட பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் தமது வீடுகளுக்கான போக்குவரத்து வசதியினை மன்மூட்டைகளின் உதவியுடன் தற்காலிக மதகு அமைத்து ஒருவருடங்களுக்கும் மேலாக போக்குவரத்து செய்து வருவதுடன் பாரிய சிரமங்களையும் எதிர் கொண்டு வருகின்றனர்.
இவ்வீதியில் பாடசாலை ஒன்றும் உள்ளதால் சிறிய மாணவர்களை வீதியின் ஓரமாக பாதுகாப்பாக அனுப்பி வைப்பதில் பெற்றார்கள் மிகுந்த சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர். பருவ மழை ஆரம்பித்ததால் மேலும் பல சொல்லொண்ண துயரங்களை இப்பிரதேச மக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் ஆகவே சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் , கிழக்கு மாகான வீதி அபிவிருத்தி அமைச்சர் , ஆகியோர் இவ்விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து செய்வதறியாது காணப்படும் இப்பிரதேச மக்களின் நீண்டகால துயர் துடைக்க முன்வருவார்களா..?
இப்பிடித்தான் மக்காள் இந்த நாட்டில் கொண்டு வரப்படும் 'திவி நெகும', 'கம நெகும', புற நகும', ஜெய்க்கா', அது இது... என்கிற எல்லா மஹிந்த சிந்தனை வேலைத் திட்டங்களும் மந்த கதியில் நடைபெறுவதும், அரை குறை நிலைமையில் கைவிடப்படுவதுமாகக் காணப்படுகின்றது.
ReplyDeleteமாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கூடாக வரும் இத்தகைய வேலைத் திட்டங்களில் அரசியல் அதிகாரத்திலிருப்பவர்கள் தங்களுக்கான 30 - 40 வீத விவகாரங்களை முடித்துக் கொண்டு கொந்தராத்துக் கும்பலொன்றிடம் கொடுத்து விடுவது வரைதான் எமது மந்திரிமார், அரை மந்திரிமார், அமைச்சரவை அந்தஸ்துப் பெற்ற மந்திரிமார் போன்றவர்களின் பணியாக உள்ளது.
அப்புறம் அது மண்ணாகக் கிடந்தாலென்ன.. மடுவாகக் கிடந்தாலென்ன.. அவர்களுக்கு அதைப்பற்றிய அக்கறையெதுவும் கிடையாது.
அம்பாறை மாவட்டத்தில் இனி தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டால்தான் அப்பகுதியிலிருக்கும் மக்களின் 'வாழ்வின் ஒளி' அரசியல் அதிகாரங்கள் இவ்விடயங்களைக் கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுத்திருப்பதாக மீண்டும் ஒரு ஊடக அறிக்கையை வெளியிடுவார்கள்.
எல்லாமே 'வாக்குகளைச் சிதறடிக்காமல் ஒற்றுமையுடன் அதிக முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை உறுதி செய்வோம்' என்ற அரசாங்கத்தின் வேலைத் திட்டத்திலுள்ளவைதான். அது வரை இப்படியான விளம்பரப் பலகைகளே எமது மக்களுக்கு மிச்சம்!!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-