மன்னாரில் கட்சி மாறுகிறார்கள் (படங்கள்)
மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் கிராமத்தின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பெரும் எண்ணிக்கையிலான ஆதரவாளர்கள் இன்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டனர்.
தலைமன்னார் பியர் ஸ்ரீ.ல.மு.கா.பொறுப்பாளர்களான அப்துல் அஸீஸ்,சின்ன மரைக்கார் ஆகியோர் தலைமையில் வருகைத் தந்த பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள்,ஸ்ரீ.ல.மு.கா.வடக்கு மக்களுக்கு துரோகம் இழைத்தவிட்டதாகவும்,இனிமேலும் அக்கட்சியின் மீது நம்பிக்கை கொள்ள முடியாது என்று கூறி,அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் இணைந்து இம்மாவட்ட மக்களினது மே்பாடுகளுக்காக உழைக்கப்போவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டவர்கள் இங்கு தெரிவித்தனர்.
Post a Comment