Header Ads



தனியார் பஸ்களில் அளெகரியங்கள் - உடனடியாக இந்த இலக்கத்திற்கு முறையிடுங்கள்

தனியார் பயணிகள் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பஸ்களில் நடத்துனரோ அல்லது சாரதியாலோ அளெகரியங்கள் எதுவும் ஏற்படுமாயின் 0115559595 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை தெரியப்படுத்த முடியுமென மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து சங்க தலைவர் அமில ரண்மண்டல தெரிவித்துள்ளார்.

இந்த தொலைபேசிக்கு கிடைக்கும் பயணிகளின் முறைப்பாடுகளை தாமதம் இன்றி பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுகபுக உரிய தண்டனை வழங்கப்படுமெனவும் அமில தெரிவித்தார்.

தனியார் பயணிகள் பஸ்களில் பயணம் செய்வோருக்கு டிக்கெட்டுகளை வழங்காமை மீதிப் பணம் செலுத்தாமை கெட்ட வார்த்தைகளால் பேசுதல் தேவை இல்லாத இடங்களில் பஸ்களை நிறுத்தி பயணிகள் பொருட்கள் ஏற்றுதல் கவனயீனமாக வாகனத்தை செலுத்தல் போன்ற பல்வேறுபட்ட பிரயாணிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் செய்களை நடத்துனர்களோ சாரதியோ செய்வார்களாயின் மேற்குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி பயணிகள் முறைப்பாட்டை தெரியப்படுத்த முடியுமெனவும் அமில ரண்மண்டல தெரிவித்தார். TL

No comments

Powered by Blogger.