Header Ads



சிங்களவர் மத்தியில் ஒரு குழுவினர் இனவாதம் பேசுவது பிழை என்று நாங்கள் எப்படி சொல்வது?

(எஸ்.அன்சப் இலாஹி)

நாங்கள் இனவாதம் பேச முடியுமென்றால், தமிழர்கள் இனவாதம் பேச முடியுமென்றால், சிங்களவர் மத்தியில் ஒரு குழுவினர் இனவாதம் பேசுவது பிழை என்று நாங்கள் எப்படி சொல்வது? நாங்கள் பேசிய இனவாதம் ஒன்றிற்கும் பொலிசார் எங்களை கைது செய்யவில்லை, நாங்கள் செய்த பிழை ஒன்றுக்கும் பொலிஸ் கைது செய்யவில்லை, முஸ்லிம் தலைமைகள் செய்த பிழை ஒன்றுக்கும் பொலிஸ் கைது செய்யவில்லை, ஆனால் இன துவேசமாக இப்பொழுது ஒரு குழுவினர் மாத்திரம் பேசுகின்றபோது மாத்திரம் அவர்களை பிடிக்கவேண்டும் என்று நாங்கள் எண்ணுவது எந்தவகையில் முறையானது? என்று உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா கேள்வி எழுப்பினார்.

அக்கரைப்பற்றில் வடிகான்களுடன், வீதி அபிவிருத்தி செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின் அடிக்கல் நடும் நிகழ்வு இடம்பெற்றது. இதன் பின்னர் அக்கரைப்பற்று ஜின்னா வீதியில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்படி கேள்வி எழுப்பினார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில் உலகம் முழுவதும் முஸ்லிம்கள் பற்றி பேசுவதற்கு ஒரு ஊடகம் இல்லை சில வேளைகளில் அல் ஜெசீரா என்று அறபியிலே இருக்கின்றது என நினைக்கலாம் அறபியில் ஒரு சொல் இருப்பதனால் இது இஸ்லாமிய ஊடகம் என்று நாங்கள் கற்பனை பண்ணலாம். உலகத்தின் அனைத்து மீடியாக்களும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலே இருக்கிறது. அமெரிக்கா நினைப்பதை தவிர வேறு யாரும் ஊடகங்களிலே பேச முடியாத அளவிற்கான ஒரு வகையான ஆட்சி உலகத்திலே நடந்து கொண்டிருக்கிறது. உணர்ச்சிவசப்பட்ட நிலையில் உணர்ச்சி வசப்பட்டவர்களாக முஸ்லிம்கள் இருந்து கொண்டு தீர்வு காண்பதற்கான ஓர் நிலையில் நாங்கள் வெல்ல முடியாது. இஸ்லாம் தொடர்பாக இஸ்லாமியர்கள் தொடர்பாக இஸ்லாமிய நாடுகள் தொடர்பாக நாங்கள் யாராவது பேசுவதாக இருந்தால் சோடா போத்தல் நிலையில் இருந்து நாங்கள் இறங்க வேண்டும் ஏய் அதோ அடிக்கிறார்கள், உடைக்கிறார்கள் என்று உடனடியாக சோடா போத்தல் கேஸ் வெளியிரங்கி ஒரு நிமிடத்தில் மீண்டும் அடங்கிவிடும். அது முடிந்துவிடும். மஹியங்கணை பள்ளிவாசல் பிரச்சினை இன்று தொடங்கியதல்ல மஹியங்கணை பள்ளிவாசலுக்கு ஒரு காலத்திலே இடம் கேட்டு பிரேமதாச ஒரு இடத்தை கொடுத்தார் அதே இடத்தில் பள்ளிகட்ட முடியாமல் போய்விட்டது. அது அவ்வாறான ஒரு நிலமை அதனையும் நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்றுதான் அது உருவாகிறது என்று யாரும் எண்ண வேண்டியதில்லை. எம்மவர்களுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது ஈக்கில் ஓட்ட இடம் கொடுத்தால் வாழைக்காயை அல்ல வாழைக்காய் லொறியையே ஓட்டுவது, ஓட்டி அப்படியே கிளிந்து போய்க்கிடக்கிறது அதனை ஒட்ட முடியாது. எப்பொழுதுமே எனக்கு இருக்கின்ற பிரச்சினை யதார்த்தவாதி வெகுஜன விரோதி, பத்திரிகைகள் அல்லது இணையத்தளங்கள் இவைகளில் எல்லாம் என்னைப்பற்றி சிலர் எழுதுவார்கள் அவர்களுடைய பிரச்சினைகள் அவர்களைப்போல் நான் இருக்கவேண்டும் என்று எண்ணுகிறார்கள். அவர்களைப்போன்றே நான் பேசவேண்டும் என்று எண்ணுகிறார்கள் அவ்வாறு இல்லை. யாதார்தம் எதுவோ அதைப்பற்றித்தான் நான் பேசுகிறேன் என்று உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா கூறினார்.

வீதியா? றோட்டு போடுகிறார்கள் சொல்லொண்ணா எவ்வளவு காலம் இதைப் போடுகிறார்கள் என்று கதைத்து முடித்திடுவார்கள். சில நேரம் பேசுவார்கள் இவர், இவருடைய வாப்பா, வாப்பாவுடைய வாப்பா எல்லாம் காபற் றோட்டில் போனமாதிரியும் நான்வந்து அதனை உடைத்து வைத்திருப்பதாகவும் சொல்லிக்கொள்கிறார்கள். உங்களுடைய தலைமைத்துவம் ஆண்டவனின் உதவியோடு சரியாக இருக்கப்பார்க்கிறது தனிப்பட்ட பிழைகள் இருக்கும். சமூகம் தொடர்பான, அரசியல் தொடர்பான விடயத்தில் நாங்கள் கவனமாகத்தான் இருக்கிறோம். ரஊப் ஹக்கீம் அரசிலே இருக்கிறார் சரி அவர் பேசுகிறார் ஏதாவது நடக்கிறதா? தலைமைத்துவம் என்பது ஓர் விடயத்தைப் பேசினால் அது நடக்கவேண்டும் பகிரங்கமாக பேசினால் பத்திரிகைகளிலே வந்தால் அது நடக்கவேண்டும் இல்லாவிட்டால் முஸ்லிம் சமூகத்திற்கு அது அவமானம். இவ்வாறான நிலையில் உங்களுடைய பிள்ளை அதாஉல்லாவின் நிலையை நீங்கள் பார்த்துக்கொள்ளவேண்டும். நான் பேச வேண்டிய அவசியமில்லை. நான் அரசாங்கத்தின் அமைச்சர் நான் ஏன் பத்திரிகைகளுக்கு பேச வேண்டும் நான் பத்திரிகைகளுக்கு பேசுவதென்பது வாக்குகளை பெறுவதற்குரிய முனாபிக்தனமாகத்தான் இருக்கும் சம்பவங்களை நிறுத்துவதற்கு அல்லது சம்பவங்களுக்கான தீர்வு காண்பதற்கான ஏற்பாடுகளைத்தான் எங்களால் செய்ய முடியும் அதுதான் யதார்த்தம்.

தம்புள்ளை பிரச்சினை அதனுடைய வரலாறு என்ன என்பதனை அந்த பிரச்சினை என்ன என்பதை நாங்கள் எல்லோரும் சத்தியம் வாங்கிக்கொண்டு பள்ளிவாசலின் உள்ளே இருந்து பேசவேண்டிய பேச்சுத்தான் அது. வெளியில் பேசினால் அதை எம்மை நாங்களே காட்டிக் கொடுப்பதற்கு சமனாகும் இவ்வாறு நிறையப் பிரச்சினைகள் இருக்கிறது. ஒரு தலைமைத்துவம் வாருங்கள் இதனை எதிர்ப்பதற்கு நான் ஆயத்தம் எந்த முறையிலும் எதிர்ப்பதற்கு நான் ஆயத்தம் என்று வழிகாட்டினால் அல்லது ஒரு நாடு பின்புலமாக இருக்குமானால் ஒரு சக்தி இருக்குமானால் நாங்களும் அடங்கிவிடலாம். எங்களை யாரும் அசைக்க முடியாது என்று அறிக்கை விடலாம். நாங்கள் மோதுவதற்கு தயார் என்று அறிக்கை விடலாம். யார் அந்தத் தலைமை? யார் அந்தப் பின்புலம்? யாருக்கு அந்த சக்தி இருக்கிறது? முதலாவதாக நமது நாட்டிற்கு நாங்கள் விசுவாசமாக இருக்கவேண்டும் அது மார்க்கம். 

நாங்கள் இனவாதம் பேச முடியுமென்றால், தமிழர்கள் இனவாதம் பேச முடியுமென்றால், சிங்களவர் மத்தியில் ஒரு குழுவினர் இனவாதம் பேசுவது பிழை என்று நாங்கள் எப்படி சொல்வது? நாங்கள் பேசிய இனவாதம் ஒன்றிற்கும் பொலிசார் எங்களை கைது செய்யவில்லை, நாங்கள் செய்த பிழை ஒன்றுக்கும் பொலிஸ் கைது செய்யவில்லை, முஸ்லிம் தலைமைகள் செய்த பிழை ஒன்றுக்கும் பொலிஸ் கைது செய்யவில்லை, ஆனால் இன துவேசமாக இப்பொழுது ஒரு குழுவினர் மாத்திரம் பேசுகின்றபோது மாத்திரம் அவர்களை பிடிக்கவேண்டும் என்று நாங்கள் எண்ணுவது எந்தவகையில் முறையானது? இன்றைக்கு முழு முஸ்லிம் தலைமைகளும் அரசாங்கத்தேர்டு இருக்கிறது. இருக்கின்ற சூழ்நிலையில் அரசாங்கம் அநியாயம் செய்கின்றது என நாங்கள் எண்ணுவது தவறானது. நான் இப்பொழுது பேசமாட்டேன் எனக்கு ஒரு சந்தர்ப்பம் வரும், இப்பொழுது நான் பேசினால் நம்மை நாமே காட்டிக்கொடுத்ததாகிவிடும். ஹலால் பிரச்சினையாக இருந்தால் என்ன? ஹறாம் பிரச்சினையாக இருந்தால் என்ன? கிரேண்பாஸ் பள்ளிவாசல் பிரச்சினையாக இருந்தால் என்ன? அக்கரைப்பற்றில் படித்த உலமாக்கள் சேர்ந்து ஒலி பெருக்கியில் எத்தனை பள்ளிவாசல்களில் அதான் சொல்வது என்பதனை தீர்மானிக்கவேண்டும், ஜூம்ஆ ஒலிபெருக்கியில் ஓதுவது எங்கு என்று தீர்மானிக்கவேண்டும். நாங்கள் மௌனமாக இருந்து சாதிக்கவேண்டிய விடயங்கள் நிறைய உள்ளது. பத்திரிகைகளை பார்த்துவிட்டு நீங்கள் மெய் சிலிர்க்க வேண்டாம் பத்திரிகைகள் எல்லாம் அவரவர் தேவைகளுக்கு உருவாக்கப்பட்டது. முஸ்லிம்கள் தொடர்பான முஸ்லிம்களுக்கென்று ஒரு பத்திரிகையும், இணையத்தளங்களும் இங்கு கிடையாது. உலகத்தினுடைய அனைத்து ஊடகங்களும் இஸ்லாத்தினுடைய எதிரிகளால் பராமரிக்கப்படுகிறது.

கொழும்பு கிரேண்பாஸ் பள்ளிவாசலில் ஒரு பிரச்சினை என்றால் நான் கதைக்க வேண்டிய  தேவையில்லை. அங்கே இருக்கிறார்கள் முஸ்லிம் தலைவர்கள். மக்களுடைய பிரச்சினைகளை பற்றி அறிந்தவர்கள் அவர்கள். பொதுவாக ஒரு முடிவெடுத்து போகின்றபோது நானும் அதற்குப்பின்னால் தலைமை தாங்கி செல்வதற்கு நான் தயார். அவர்களுடைய பிரச்சினைகளை பேசுவதற்கு தலைமைத்துவங்களும், அரசியல் வாதிகளும், அரச அமைச்சர்களும் இருக்கின்ற போது நான் இங்கிருந்து துள்ளிப்பாயத் தேவையில்லை. நம்மளுடைய பல் உடைந்து போய்விடும். எங்களது பகுதியினுடைய பிரச்சினை என்றால் நாங்கள் முன்னுக்கு நின்றோம் கிழக்கு மாகாணத்தினுடைய பிரச்சினை என்றால் நாங்கள் முன்னுக்கு நிற்போம். பௌசி முன்னுக்கு நிற்கவில்லை, ரஊப் ஹக்கீம் முன்னுக்கு நிற்கவில்லை, அலவி மௌலானா முன்னுக்கு நிற்கவில்லை. நான்தான் நின்றேன் இன்னுமொருவரின் சோற்றுக்குள் மாங்காய்யை போட்டு பிசைய வேண்டிய அவசியமில்லை. நான் சொன்னதொல்லாம் நடக்கிறது, இப்போதும் சொல்லியிருக்கிறேன் அதுதான் நடக்கும். நான்தான் சரியான அஷ்ரப்பின் இடத்தில் இருக்கிறேன். இவர்களால் முடியுமா ஏதாவது செய்வதற்கு? கை உயர்த்திப் பேசுகிறார்கள் வெளியில் வந்து பேசட்டும் அப்போது சொல்வோம் அவர் வீரன் என்று, வெளியில் போய் தமிழ் பேப்பருக்கு மாத்திரம் கதைப்பது, சிங்கள பேப்பரில் வேற பேச்சு. இப்போது  முஸ்லிம்களை உணர்வூட்டுவதற்கு இணையத்தளங்களை பிடித்து வைத்திருக்கிறார்கள் என்று மேலும் கூறினார்.

13 comments:

  1. neega singamna awarhal asingam illa ithu yaarukkum theriyathu

    ReplyDelete
  2. GOVRAVA AMAICHAR AVRHALA NEENGKAL IPPADI PASUHINREERHAL EAN UNGKALAL ARASANGKATTHAI VIDDU THANIYAHA ARASIYALIL NINRU VELLA MUDIYATHU UNGKALUKKU THERIYAMALE UNGKAL KADCHI ALINTHU VAKONDU VARUHIRATHU ATHARKKU NALLA PADAM SENRA MURAI NADANTHA KILAKKU MAHANA SAFAI THERTHAL SLMC I VEENAHA PALI THOORTHAMAL MUSLIM SAMUHATHUKKU NALAATHU SAIYA PARUNGKAL UNGKALAL MUDINTHAL ARASANGKATTHUKKU ETHIRAHA ORU KARUTTHAI MUN VAIKKA MUDIUMA ILLAI ADUTTHA NIMIDAM UNGKAL PATHAVI PARI POIVIDUM ARASANGKATTHUKKUL IRUNTHU KONDU SLMC ARASANGKATTHAYE VIMARSIKKUTHU BUT NEETHI AMAICHIL ENTHA MAATRAMUM ILLAI NAANUM PARKKANTHAN IPPADI ELLAM EASURANAE AMAICHU PARI POHMO ENTRU AANAL IPPOTHAYA ARASANGKAM SLMC KKU PAYANTHU POI ULLATHU ARASIYAL MADAIL EARI NEENGKAL ATHIHAMANA POIHALAI SOLVEERHAL ENTRU EMAKKU NANRAHA THERIUM NAN SAVAL VIDUHIRAN UNGKALAL MUDINTHAL ITHAI NIRAIVETRUNGKAL PARPPOM 1. TARPPOTHU MUSLIMKALUKKU NADAKKUM ANEETHIHALUKKU ETHIRAHA ARASANGKATTHUKKU ETHIRAHA KARUTTHU SOLLA MUDIUMA 2.UNGKAL THOHUTHI TAVIRNTHA MATRA THERTHAL THOHUTHI IL IPPOTHU ORU AASANAMAVATHU PRA MUDIUMA APIVIRUTTHIKKU ALLAH UTHAVI SAIVANAHA

    ReplyDelete
  3. ha ha, he is now started buttering to MaRa. We spoke the recisim but we did not act, we did not demolish the temples, we did not burn the shops. now he is trying to find right what BBS doing. he don't have any guds to speaka and take any single step against while our mosques are being hit and our religious ring of Halal has been thrown away. now he is also in same pool of cheaters of Muslim community. his speech is a clear evident that he will only speak if there is a problem in Eastern, not for whole community of SL.

    ReplyDelete
  4. I am sure that Hon. Minister was on HIGH when he delivered his NOBLE speech surrounded by thugs & Gooligans. And the Audience would have digested as well. Hmm.. Here is the Muslims and this is the world that we are living in. Anybody understood what's he trying to say ??? May Allah SWA protect the humanity from the Evils.

    ReplyDelete
  5. அதாஉல்லவை எந்த கோணத்தில் மக்களாகிய நாம் நோக்கினாலும், அவர் சொல்லி உள்ள விடயம் அத்தனையும் 1000% உண்மை.... சரியானதே.....

    கொசவன் கொசவண்ட வேலைய பாக்கணும்.....
    கொல்லன் கொல்லண்ட வேலைய பாக்கணும்....
    அப்போ நாட்டில் சுமூக நிலை தோண்றும்.....
    உணர்ச்சி வசனம் பேசி நாட்டில் மக்களை குழப்பக்கூடாது...

    ReplyDelete
  6. is this a job he doing as leader Ashref done? very funny. what he is talking about actually, when we talk about racism? when we insult the Buddhism? when we break the temple of Buddhist? can you answer for this all? first you should love islam and learn about islam then only you will understand that there will be no way to insult other religions. no any our leaders were insult their religion and call the muslims to break the temple and still no one never doing it.

    ReplyDelete
  7. மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடா நல்ல முயற்சி, இதையே 10 வருசத்துக்கு முன்னால சொல்லி இருந்தா நம்பி இருப்போம் உங்கட இயலாமைய மறைக்க இப்படி ஒரு அபாண்டம் சமூகத்துக்கு சொல்ல வேண்டியதில்ல. நாங்க எப்ப ஐயா கோவிலையும் பன்சலையயும் உடைச்சம், எப்போ அவங்கட உடுப்பு எங்கட மார்க்கம் அனுமதிக்கலன்னு மாத்த சொன்னம், தின்கிற சோத்துல கணக்கு பார்த்தோம்.பெரும்பான்மைக்கும் சிறுபான்மைக்கும் ஒரே சட்டம் நாட்டுல அமுலில் இல்லைங்கிறது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம். நீங்க நக்குறதுக்கு நாங்க நாக்கு வளிக்கனுமா?

    ReplyDelete
  8. i cannot commence your speech which you mention the name of the ministers they are patients their worst people they nothing done for Muslims community don't count them

    ReplyDelete
  9. Inavathatha avanandalum pasattum athula agkalukku pirachinai illa, but athanai arasagkathin poorana aatharavoada pasurathoada mattumillamal sattatha kai il adukkiratha paththiththan naagka katkiroam manthiri avarhalai, ithallam ugkaluku valagkutha or makkalla votea vagkittu neegka anupaikkira sohusu valkai atha valangkama thadukkutha, arasukkaha vakkalathu vaagkama ugkada makkalukkaha valugkal amaichar avarhalai.

    ReplyDelete
  10. இவர் குறித்து சிரிப்பதா? சிந்திப்பதா?

    ReplyDelete
  11. அவனவனுக்குத்தான் தெரியும் அவன் அவன் துறைசார் இடுக்கும் முடுக்கும்.

    ReplyDelete
  12. At the end of the day he made is his Son as mayer. Mttayn politics in Mattackkallappu. Let see for how long his drama?

    ReplyDelete
  13. Intha ATHAULLAH Peyan enna kathaikiran .Iwangal thanda seattuku payappadurangal .ennada nee peya pakkura awan thanda awan .PEYAN onda perukke wekkam da. paradesi ...

    ReplyDelete

Powered by Blogger.