பசீர் சேகுதாவூத்திற்கு அடிக்கிறார் தவம்..!
(எஸ்.அன்சப் இலாஹி)
வட மாகாணத்திற்கான அதிகாரங்கள் ஏனைய மாகாணசபைகளை விடவும் அதிகமாகவும் கனமாகவும் இருக்கப்போகின்ற நிலையில், வட மாகாண முஸ்லிம்கள் தமிழர்களின் எதிரிகளோடு கூட்டுச் சேர்வது எவ்வளவு அபாயமானது என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். இப்படி இவை போன்ற எல்லா விடயங்களையும் கவனத்தில் கொண்டுதான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட மாகாணசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்தது என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் கூறினார்.
சமகால அரசியல் நிகழ்வுகள் தொடர்பில் அக்கரைப்பற்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்படி கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
வட மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவை கண்ணை மூடிக்கொண்டு எடுக்கவில்லை. வட மாகாணத்தில் எதிர்காலத்தில் அமையப்போகும் ஆட்சி வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் அவர்களின் எதிர்கால இருப்பு போன்றவற்றை கருத்திற்கொண்டே முஸ்லிம் காங்கிரஸ் அப்படியான ஓர் தீர்மானத்திற்கு வந்துள்ளது.
வட மாகாணத்தைப் பொறுத்தவரை அங்குள்ள 36 ஆசனங்களில் ஆகக்குறைந்தது 22 அல்லது 23 ஆசனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி அங்கு ஆட்சியை அமைக்கப்போவதை சிறு பிள்ளை கூட இலகுவாக எதிர்வு கூறும். தமிழ் சமூகம் இதுவரைக்கும் இழந்து நிற்கும் 200,000 ற்கும் அதிகமான உயிர்கள், 25,000ற்கும் மேற்பட்ட அங்கவீனர்கள், 15,000ற்கும் மேற்பட்ட அனாதைகள், 90,000 விதவைகள் என்பவற்றை தமக்குப் பரிசளித்த பேரினவாதிகளைக் கொண்ட பெரும்பான்மைக் கட்சிகளை தமது பரம எதிரிகளாக பார்க்கின்றார்கள். இந்நிலையில் வடக்கில் வாழும் முஸ்லிம்களும் தமது பரம எதிரிகளான பேரினவாத எதிரிகளோடு கைகோர்த்து நிற்கின்றார்கள் என்ற செய்தி, அமையப்போகும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆட்சிக்கு எவ்வளவு ஆத்திரம் உண்டு பண்ணும் விடயமாக அமையும் என்பதனை நாம் சிந்திக்க வேண்டும்.
புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்து அவர்களின் கருத்துக்களை ஓரம் கட்டிய சர்வதேச சமூகம், வடமாகாணத்தில் அமையப்போகும் மாகாண அரசாங்கத்தின் குரலை கவனமாக செவி மடுக்கவும் அதற்காகச் செயற்படவும் முற்படும். ஏனனில், கடந்த 30வருடகால ஆயுதப் போராட்டமும் அதற்கு முன்னரான சாத்வீக வழிப் போராட்டங்களும் தமிழ் சமூகத்திற்கான ஆட்சி அதிகாரத்திற்காகத்தான் நடைபெற்றது. அவ்வாறான நீண்ட போராட்டத்தில் முதன் முறையாக தமிழ் சமூகத்தின் சுதந்திரத் தெரிவில் வட மாகாணசபை ஆட்சி, அவர்களுடைய போராட்டத்தின் ஒரு மட்ட அடைவாக அமையப்போகிறது. வட மாகாணம் தமிழர் மாகாணம்தான் என்பதை உலகம் தௌ;ளத் தெளிவாய் விளங்கிக் கொள்ளப் போகிறது. அதனால் வடமாகாணத்திற்கான எல்லா விடயங்களிலும் தமிழர்களே முன்னுரிமைப்படுத்தப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுப்பதோடு இலங்கை அரசாங்கத்திற்கும் பல்முனை அழுத்தங்களைப் பிரயோகிக்கப்போகிறது.
இதனால், வட மாகாணத்திற்கான அதிகாரங்கள் ஏனைய மாகாணசபைகளை விடவும் அதிகமாகவும் கனமாகவும் இருக்கப்போகின்ற நிலையில், வட மாகாண முஸ்லிம்கள் தமிழர்களின் எதிரிகளோடு கூட்டுச் சேர்வது எவ்வளவு அபாயமானது என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். இப்படி இவை போன்ற எல்லா விடயங்களையும் கவனத்தில் கொண்டுதான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட மாகாணசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்தது.
ஆனால், சிலர் இதனை விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்கள். இவ்வாறு விமர்சிப்பவர்கள் கட்சிக்கு உள்ளும் கட்சிக்கு வெளியேயும் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் எல்லோருக்கும் மீண்டும் ஒரு முறை நான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட மாகாணசபைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா? அல்லது இணைந்து போட்டியிடுவதா? என்பதனைத் தீர்மானிப்பது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸே அன்றி அமைச்சர் பதவிக்காக அரசாங்கத்தின் காலில் விழுந்து கிடப்பவர்களும் அரசாங்கமும் அல்ல. இந்த தீர்மானத்தால் முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கத்துடன் சேர்ந்து போட்டியிட வைப்பதற்கு கொந்தராத்துப் பேசியவர்கள் இது முடியாது போன காரணத்தினால், கட்சிக்குள் இருந்து கொண்டே கட்சியில் உள்ளவர்களில் சிலரை திரைமறைவில் நின்று அரச அணியோடு சேர்த்தும் விட்டிருக்கிறார்கள். 'பூனை கண்ணை மூடிக் கொண்டு பால் குடிப்பது போன்று' இதனை யாரும் அறிய வில்லை என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தக்கட்சியை பயன்படுத்தி மக்களால் தெரிவு செய்யப்படாமலே பலமுறை பாராளுமன்றம் வந்தவர்கள், இப்போது ராஜ விசுவாசத்தால் இந்தக்கட்சியை சீரழிக்கப்பார்க்கிறார்கள். இது மக்கள் இயக்கம். இந்த இயக்கம் தன்னுடைய முழுப் பலம் கொண்டு, கடந்த காலத்தில் இப்படி நடைபெற்ற எத்தனையோ துரோகங்களுக்கு முகம் கொடுத்திருக்கிறது. இது ஒன்றும் புதிதல்ல.
முன்பு அமைச்சர் பதவிகளுக்காக அதாஉல்லாவும், றிசாட்டும் கட்சியைவிட்டு வெளியேறி துரோகம் செய்தார்கள் இப்போது புது முறையில் கட்சிக்குள் இருந்தே பதவிக்காக கட்சியையே கருவறுக்க முயற்சிப்பதை நீண்ட காலம் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. கட்சிப் போராளிகளும் இதனை அனுமதிக்க மாட்டார்கள் ஆகவே, களை எடுக்கவேண்டிய கட்டத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் வந்திருக்கிறது. அவ்வாறு செய்வதினால் மட்டும்தான் முஸ்லிம் காங்கிரஸ் என்ற இந்த இயக்கத்தையும் முஸ்லிம் சமுகத்தையும் பாதுகாக்க முடியும் என நாங்கள் திடமாக நம்புகிறோம்.
கட்சிக்குள் பல கருத்துக்கள் வருவது ஜனநாயகம் எனக் கூறி இவர்கள் தப்பிக்கொள்ள முயற்சிக்கிறார்கள் ஆனால், முஸ்லிம் காங்கிசின் முக்கிய பதவிகளில் இருந்துகொண்டு எப்படிப் போட்டியிடுவது என்ற இறுதித் தீர்மானம் எடுக்கும் உயர் பீடத்தில் கலந்துகொள்ளாமல், தனித்துப் போட்டியிடும் தீர்மானம் எடுக்கும் போது தாமும் இருந்தால் அது அரசாங்கத்தை அதிருப்தி அடையச் செய்துவிடும் என்பதற்காக ,அக்கூட்டத்திலேயே கலந்து கொள்ளாமல் இருந்தார்கள். எந்த வகையிலும் அரசாங்கத்தை திருப்திப்படுத்துவதில் மட்டுமே கவனமாக இருக்கிறார்கள். கட்சியும் சமூகமும் எப்படிப்போனாலும் நாமும் நமது பதவியும் இருந்தால் போதும் என்ற மனநிலையில் இருக்கிறார்கள். இவர்களைச் சரியாக இனம் கண்டு இத் தேர்தலில் மக்கள் இவர்களின் கருத்தை தோற்கடிப்பார்கள் என்று திடமாக நம்புகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்
correct what you said. good idea try your best to change the leader. Rauf hakeem is not fit for leader ship at leased 60% he want to be a former leader Marhoom Asraf. Rauf hakeem dont have any activeness.how many mosque almost 17 mosque destroyed he never talk in proper way just done drama only most time he has done selfishness
ReplyDeleteதவங்காக்கோவ்.....
ReplyDeleteஇது நீங்க தானா கதைக்கிறேள்....என்ன கொதறத்துஹாhhh
அதாஉல்லா,றிஸாட் எல்லாரும் கட்சிக்கி துரோகம் செஞ்சென்டு செல்றேல். அந்த துரோகத்துல தான காக்கோ நீங்க காசி கப்பு கன்ட்ரக்ட்டு எல்லாங் கண்ட
சும்மா கேக்கன் தொடந்து அதாஉல்லாவும் றிசாததும் கக்கிமொட இருந்திருந்தா ஒங்கட கா ஓட நாலு நல்ல ரோட்டு கெடைக்கிமா?
(ரோட்டா முக்கியம்? உரிமைதான் முக்கியம் என்டு வால முறுக்காதேல் அதாஉதாவுல்லாவும், றிசாத்தும் போன பொறவு இந்த13 வருசத்துக்கும் ஓட்டுப்போட்டு உல்லாச வாழ்வு தாற கிழக்குக்கு கக்கிம் தலவர் கொன்டு குமிச்ச உரிம எத்துன?
உரிம உரிம என்டு கிழக்குல சில்லறயா ஓட்டு வாங்கி கொழும்புல மொத்த யாவாரம் பாக்கிறது தியாகமாத்தெரியிதா? செரி.. அதாவுல்லாதான் பொலன்டு வெச்சிக்கிவோம். தலைவர் பள்ளிவாசலையே மூலதனமாக்கினவருல்லவா? இது ஆண்ஸ்ரீடவனுக்கு செய்யிர துரோகமுல்லா?
தமிழருக்கு எதிரா செயற்படப்புடா என்றியலே.... அப்ப.. சம்பந்தன் கிழக்கில ஆட்சியமைப்போம் வாங்கென்டு கூப்பிட்டென்ன.....ஏம் போகல்ல பள்ளி ஒடச்ச அரசாங்கத்துடல்லவா ஒட்டினவரு தல. இது சாதாரன துரோகமா? கிழக்கில பொறந்தவன் செய்தாத்தானா துரோகம். குண்டிலேந்து செய்யலாமா
தமிழருக்கு எதிரான அரசாங்கத்துக்கு ஒத்துழைக்கப்படான்றியலே... இப்ப எந்த தரப்புல நிங்களும் தலவரும் இரிக்கேல். தலவருட்டக்கேட்டா சா...நக்கி யம்டுறாரு. நீங்க என்ன செல்றேல்?
அதாவுல்லாவைப் பத்தியோ றிசாட்ட பத்யுதினைப்பத்தியோ கதைக்க தலவருக்கு என்ன யோக்கியதை இரிக்கி?
தொடநது தலவரோடயோ இருந்திருந்தா இன்டைக்கி வட மாகாண முஸ்லிம்களுக்கு றிசாட் செஞ்சிருக்கிற சேவைல மண்ணளவாவது சா நக்க யத்தலவர் செஞ்சருப்ஸ்ரீபாரா?
இவர்கள் வெளியேறியது துரோகம்டா...தலவர் தலவரா இருக்கிக்கிறது வரலாற்று துரோகம்
கடந்தகாலத்த மறந்து என்னென்னமோ கதைக்கேல்!!!! எதுக்கு எதிர்கால தேர்தல்ல தலவர்ர மனசில எடம் புடிக்கயா? இப்பமட்டும் ஒங்கள தலவர் மனசில வெச்சிக்காருன்டு நெனைக்கேலா? கெடயாது.
கிழக்குல ஒருத்தனயும் தலஎக்க உடாம கன்டியின் சண்டித்தனமே எக்காலத்திலயும் இரிக்கனுண்டு தலவர் யாரவேணுன்டாலும் எப்பன்டாலும் பாவிப்பார்.
நீங்களும் கட்சில் புதியவர் நிதானமாக கருத்து தெரிவித்தால் நல்லது
ReplyDeleteநீங்கள் சொல்வதை உரியவர் சரியாக புரிந்திருப்பார்?.. மற்றவர்களும் கொஞ்சம் இதனை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் .
ReplyDeleteதம்பி தவம், முஸ்லிம் காங்கிரசுக்கு நீங்கள் செய்த துரோகம் மாதிரி வேறு ஒருவரும் செய்தது கிடையாது. எனவே கொஞ்சம் அடக்கி வாசிப்பது மிக்க நன்று.
ReplyDeleteஒரு அரசியல் நாகரிகம் என்பதை கொஞ்சமும் புரியாதவராக இருக்கிறீர்கள். உள்கட்சி பிரச்சினைக்கு, கட்சி ஒரு முடிவு எடுப்பதுக்கு முதல் அந்த பிரச்சினையை சந்திக்கு கொண்டு வருவது, குடிகாரன் வீட்டு பிரச்சினையை சந்திக்கு கொண்டு வருவது போல் உள்ளது.
தம்பி தவம் நீங்கள் மக்களிடம் வேலை தருவதாய் வாங்கிய பணத்தினை தயவு செய்து அவர்களிம் கொடுத்து விடுங்கள். இல்லை என்றால் உங்கள் கட்டுரை வெளிவரும்.
ReplyDeleteதவம் சாரோட வாய திறக்க விடமாட்டாங்க போல இருக்கே பசங்க, அவ்வளவு மோசமாவா அவர் பண்ணிட்டாரு.
ReplyDeleteMr. Thavam, Assalamu Alaikkum, last time also SLMC contest in their own symbol after that what happened, you joined with the Government. Now also making another drama. you want innocent peoples votes only to make your luxury life then you will get everything and joined with the government. since Mr. Athaullah kicked out you from his party you have not seen this muslim community. you remember last two yeras before you make the SLMC leader and supporters to observe their IFTAR at road side in Akkaraipattu. now you are voicing for the Muslim Community. that is not good, please keep silence. you dont have any rights to speak for muslim. you are a begger. remember allah and ask him forgive your sins. Try to be a real muslim
ReplyDeleteNowfer
Dear brothers who comment here: Juaffna Mulism provide a stage for comments but we need to be reasonable in our arguments. Most of the comments have gone away from the news article. I think the editor must judge whether the comment is relevant for the News.Otherwise it seems very ugly that Jaffna Muslim becomes a place to wash the dirty linen in public. The question is whether it is right for Muslims to vote for the Government which never took any action for all the problems we have and the position of SLMC. When the pulse of the majority Muslims is to go against the government in Kandy, Kurunagala and Puttalam SLMC has to decide how to face the election in general and decided so. But when the general decision is taken all have to be bound to that without just take another stand outside the high command. That is what the collective responsibility and the Masoora means. If one goes on and trying to show that I am pure in my politics the other side of the problem also have to be discussed. That is what has taken place here. but this place can not be used for political vengeance.
ReplyDelete