முஸ்லிம் பாடசாலைகள், மத்ரஸாக்களில் பகவத் கீதை - எதிர்ப்பினால் வாபஸ் பெறப்பட்டது
மத்தியப் பிரதேச மாநிலத்தில் மதரஸாக்களில் பகவத் கீதையை கட்டாயப் பாடமாக போதிக்க வேண்டும் என்ற உத்தரவை ஆளும் பாஜக அரசு திரும்பப் பெற்றுள்ளது.
உருது பாடப் புத்தகங்களை கொண்டுள்ள அனைத்து இஸ்லாமிய பள்ளிகள் மற்றும் மதரஸாக்களில் 2013-14 ஆம் ஆண்டு பாடப் புத்தகங்களில் பகவத் கீதையை கட்டாயப் பாடமாக சேர்க்க வேண்டும் என்று கடந்த 1-ஆம் தேதி அரசு விடுத்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த சிறுபான்மை கல்விக்கான மத்திய அரசின் தேசிய கண்காணிப்பு குழு உறுப்பினர் ஹலீம் கான் "மத்தியப் பிரதேச அரசின் இந்த உத்தரவு அரசியல் அமைப்புக்கு எதிரானது. ஆளும் பாஜக அரசு தன் உத்தரவை வாபஸ் பெறவில்லையெனில் நாங்கள் நீதிமன்றத்திற்கு செல்வோம்" என கூறியிருந்தார்.
இதற்கிடையே இந்த உத்தரவை வாபஸ் பெறுவதாக முதல்வர் ஷிவ்ராஜ்சிங் சவ்ஹான் அரசின் செவ்வாய் அன்று தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள சிறப்பு இந்தி புத்தகங்களிலும், 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான சிறப்பு ஆங்கில புத்தகங்களிலும் கீதை பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. inne
Post a Comment