ஆரிப் சம்சுடீனுடன் ஒரு நேர்காணல்..!
(நேர்காணல்: எம்.எம்.ஏ.ஸமட்)
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீனின் அரசியல் பிரவேசத்தின் ஓராண்டு நிறைவையொன்றி ஜப்னா முஸ்லிம் இணைத்தளத்துக்காக அவரை நேர்காணல் மேற்கொண்டபோது, அவரிடம் தொடுக்கப்பட்ட வினாக்களும் அதற்கான பதில்களும் வருமாறு:
கேள்வி: மனித ஆளுமை பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
பதில்;: ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு ஆளுமையுடையினேயே பிறக்கின்றான். ஆனால். அந்த ஆளுமைகள் வெளிப்படுத்தப்படுவதற்கு ஒவ்வொருவருக்கும் சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும் சரியாக அமைவதில்லை. சிலருக்கு சந்தர்ப்ப சூழ் நிலைகள் சரிவர அமைந்தாலும் அவர்களால் அவர்களுக்குள்ள ஆளுமைகளைப் பயன்படுத்தத் தவறுகின்றனர். தங்களுக்குள்ள ஆளுமைகளை இனங்கண்டு அவற்றை சரியாகப் பயன்படுத்துவதே நம்மை திறமைமிக்கதொரு மனிதனாக்கும் என்று என்னுகின்றேன்.
கேள்வி : உதவும் மனப்பாங்கு குறித்து உங்களது கருத்தென்ன?
பதில்: ஒரு மனிதன் மற்றுமொரு மனிதனுக்கு ஏதோ ஒருவகையில் உதவியாளனாகவே இருக்கிறான். ஆனால் ஒருவனால் பலருக்கு உதவ முடிவது அவனிடம் பணமோ அல்லது பதவியோ அவனை அடையும்போதுதான் என்பது யதார்த்தமாகும். அவ்வாறு பணமும் பதவியும் வந்து சேர்ந்தாலும் அவற்றைத் திட்டமிட்டு நற்கருமங்களில் குறிப்பாக வறுமையிலும் வருமைப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு அத்தகையவர்களால் முடிவதில்லை. இது அவர்களின் துரஷ்டவசமென்றே சொல்ல வேண்டும்.பட்டமும் பதவியும் பணமும் இருந்தும் திட்டமிடலும் ஆளுமையும் இல்லையென்றால் அத்தகைய பட்டமும் பதவியும் பணமும் இருந்தும் எவ்வித பிரயோசமுமில்லை. அவர்கள் வாழ்ந்தும் மறக்கப்பட்டவர்களாகவே வாழ்ந்து மறைகின்றனர்.
கேள்வி: வாழ்வாதார உதவி வழங்கும் வாழ்வின் ஒளி உதவித்திட்டம் பற்றி?
பதில்: வாழ்வாதார உதவி தேடி நிற்கும் நம் மக்களின் வாழ்வின்; நாற்துறைகளிலும் எழுச்சியை ஏற்படுத்தி, அதனூடாக ஒளிமயமான வாழ்க்கையை ஏற்படுத்த துணை நிற்கும் ஒர்; உதவிச் செயற்றிட்டமே 'வாழ்வின் ஒளி'
கேள்வி: தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறீர்களா?
பதில்: தேர்தல் காலங்களில் மக்கள் மத்தியில் பல முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன. அவற்றில் எது மக்களுக்கு அவசியமாகவுள்ளதோ அவற்றை அடையாளம்கண்டு நிறைவேற்று வைக்கப்படுருகிறது. அவற்றை நடைமுறைப்படுத்துவதற்காகவே வாழ்வின் ஒளி உதவித் திட்டம் உருவாக்கப்பட்டது.
கேள்வி: வாழ்வின் ஒளி உதவித்திட்டத்தின்போது உங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு மாத்திரம் உதவி வழங்குவதாக கூறப்படுகிறதே?
பதில்: மனச்சாட்சிக்கு மதிப்பளித்து, மனிதாபிமானப் பண்புகளுடன் உருவாகும் ஆளுமைகளினாலேயே மனிதத் தேவைகளின் அவசியம் உணரப்படுகிறது. இது தத்துவ மேதைகளின் கருத்தாகும். எனது ஆள் மனதில் ஊற்றெடுத்த மனிதநேய வெளிப்பாட்டின் வடிவமே இந்த வாழ்வின் ஒளி வாழ்வாதார உதவித் திட்டம் என நான் எண்ணுகின்றேன். வாழ்வின் ஒளி வாழ்வாதார உதவிச் செயற்றிட்டத்தின் முன் கட்சி, கொள்கை, பிரதேச வேறுபாடுகள் தோற்றுப் போய் நிற்கின்றன. ஏனெனில், இந்த அத்தனை வேறுபாடுகளையும் தாண்டி வாழ்வின் ஒளி ஒவ்வொரு மனைக்கும் வாழ்வுக்கான ஒளியை வழங்கிக் கொண்டு இருக்கிறது. தொடர்ந்தும் நம் மக்களின் வளமான வாழ்வுக்கான வழியை இந்த வாழ்வின் ஒளி திறக்கும். இதில் எவ்வித வேறுபாடுகளும் காட்டப்படாது.
கேள்வி : 2012ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டி எழுப்பி அவர்களின் வாழ்வில் எழுச்சியை ஏற்படுத்துவதற்காக நீங்கள் அளித்த வாக்குறுதிகளைக் கூற முடியுமா?
பதில்: எனது முதலாவது அரசியல் பிரவேசமே அந்தத் தேர்தல் களம்தான். அத்தேர்தல் களம் பெரும் சவாலை எனக்கு ஏற்படுத்தியது சவால் நிறைந்த அந்தக் களத்தில் நின்று வெற்றிபெற்றால் சமூதாயத்தின் நலன்களில் அக்கறை காட்டுவேன் எனவும் அந்த அக்கறை திட்டமிடப்பட்ட வடிவில் நிறைவேற்றப்படும் எனவும் மக்கள் மத்தியில் கூறியிருந்தேன் மக்களின் தேவைத்துறைகளை நான்காகப் பிரித்து ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர்பில் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன. அவற்றில் குடும்பத் தலைவிகளுக்கும் இளைஞர் யுவதிகளுக்குமாக் மனைப் பொருளாதார விருத்திக்கு உதவுதல். தொழிலற்ற இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் தொழில் வழி காட்டுதல், பெண்களிடையே சுய தொழில் முற்சிக்கான ஊக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் உற்பத்திக்குச் சந்தை வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தல். சேமிப்பையும் சிக்கனத்தையும் குடும்பங்களில் ஏற்படுத்த வழிகாட்டுதல், மக்களின் பொருளாதார விருத்திக்கான உதவிகளை உரியவர்களின் உதவி; கொண்டு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல். போன்ற மக்களின் வாழ்வாதாரத் தேவைகளுக்கான, அவர்கள் வேண்டி நிற்கும் பல்வேறு தேவைகள் கருதி ஒவ்வொரு துறைசார்பான பல முன்மொழிவுகள் மக்கள் முன் முன்வைக்கப்பட்டன.
கேள்வி: கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களின் நலன்களுக்காக முதன்முதலாக கிழக்கு மாகாண சபையில் குரல் கொடுத்தவர் என கிழக்கு ஊடக அமைப்புக்கள் பராட்டியுள்ளனவே?
பதில்: உண்மையில் ஊடகவியலாளர்கள் கௌரப்படுத்தப்பட வேண்டியவர்கள். அவர்களின் நலன்கள் பேணப்பட வேண்டும். அவர்களுக்காக மக்கள் பிரதிநிதி என்ற வகையில் குரல்கொடுக்கப்பட்டது. எனது முதலாவது அரசியல் வெற்றிக்கு வழிவகுத்தவர்களில் ஊடகவியலாளர்களின் வகிபங்கு மகத்தானது. எனது தேர்தல் கால முன்மொழிவுகளில் ஊடகவியலாளர்களின் நலன்கள் குறித்து பேசப்பட்டது. அதை நிறைவேற்றி வைப்பதற்காகவே கடந்த மாகாண சபை அமர்வின்போது
constructive & meaningful interview, the intention is very important in social welfare activities and all endeavors, may Allah bestow chances to fulfill your good dreams & challenging promises, I wish to achieve the prosperous & bright future in your field.
ReplyDeleteI M Thalib
May Allah bless you to strengthen your ground & burn your midnight oil to empower the community.
ReplyDelete