பிறந்த நாள் கொண்டாடிக் கொண்டிருந்த இளைஞர் முதலைக்கு இரையானார்
ஆஸ்திரேலியாவில், பிறந்த நாள் கொண்டாடிய இளைஞர், முதலைக்கு இரையானார். ஆஸ்திரேலியாவின், டார்வின் நகருக்கு அருகே, மேரி நதிக் கரையோரத்தில், நேற்று முன்தினம், ஓட்டல் ஒன்றில், 24 வயது நபர், பிறந்த நாளைக் கொண்டாடினார். நண்பர்களுடன், பிறந்த நாளைக் கொண்டாடிய, அவர், மேரி நதியில் இறங்கி நீச்சலடித்தார். இந்த நதியில், முதலைகள் அதிகம் உள்ளதாகச் சிலர் எச்சரித்தனர். இருப்பினும், அந்த இளைஞர், நீச்சலடித்துக் கொண்டிருந்தார். அப்போது, ராட்சத முதலை ஒன்று, அந்த இளைஞரை தன் கோர பற்களால் பிடித்து இழுத்துச் சென்றது. நதிக் கரையோரம் இருந்தவர்கள் அலறினர். உடனடியாக, மீட்புக் குழுவினரை அழைத்தனர். ஆனால், மீட்புக் குழு வருவதற்குள், அந்த முதலை ஆற்றின் அடியில் சென்று விட்டது. முதலைகள் அதிகம் உள்ள நதி என்பதால், மற்றவர்களும், ஆற்றில் குதிக்கப் பயந்தனர். மீட்புக் குழுவினர் தேடியும், இதுவரை, அந்த இளைஞரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. முதலைக்கு அந்த இளைஞர் இரையானதாகக் கருதப்படுகிறது.
Post a Comment