Header Ads



யேசுநாதருக்கு மரண தண்டனை விவகாரம் - சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு

(தினகரன்)

யேசு கிறிஸ்து மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது மற்றும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக கென்ய நாட்டு வழக்கறிஞர் ஒருவர் ஹேகில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

கென்ய நீதித்துறையின் முன்னாள் பேச்சாளரான டொலா இன்டிடிஸ் தொடுத்திருக்கும் வழக்கில் இத்தாலி குடியரசு மற்றும் இஸ்ரேலி அரசு மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 

கடந்த 2007 ஆம் ஆண்டு இன்டிடிஸின் வழக்கை நைரோபி உயர் நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்தே அதனை அவர் சர்வதேச விவகாரங்களை விசாரிக்கும் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

இதன் மூலம் யேசு மீதான குற்றச்சாட்டு தவறு என சட்டபூர்வமாக நிரூபிக்க இன்டிடிஸ் எதிர்பார்த்துள்ளார்.

2000 ஆண்டுகளுக்கு முன்னர் யேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த சம்பவம் குறித்து புதிய ஏற்பாட்டில், யேசு அற்புதங்களை வெளிக்காட்டியது மற்றும் கடவுளின் குழந்தை என்று கூறியதன் மூலம் மத நிந்தனைக் குற்றம்சாட்டி யூத நிர்வாகம் அவரை கைது செய்ததாக கூறப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் ஈஸா (அலை) என்று நம்பிக்கைகொண்டுள்ளவர், வானத்திற்கு அல்லாஹ்வினால் உயர்த்தப்பட்டு, உலகம் அழிவதற்கு முன் மீண்டும் பூமிக்கு இறக்கப்படுவாரென இஸ்லாம் கூறுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.