இலங்கை அணி தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்தது
ருவென்ரி 20 தர வரிசை பட்டியலில் இலங்கை அணி தொடர்ந்தும் முதலிடத்திலுள்ளது. இலங்கைக்கு எதிரான கடைசி ருவென்ரி 20 போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி பெறும் பட்சத்தில் சர்வதேச தரவரிசை பட்டியலில் நம்பர் 2 இடத்துக்கு முன்னேறும் நிலை இருந்தது. தவிர இப்போட்டியில் தோற்றால் இலங்கை அணி தனது நம்பர் 1 இடத்தை இழக்கும் நிலை ஏற்பட்டது.
ஆனால், இலங்கை அணி வென்றதன் மூலம் ருவென்ரி 20 தர வரிசையில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கம் போல இலங்கை முதலிடத்தில் (127 புள்ளி) நீடிக்கிறது. அடுத்த நான்கு இடங்களில் பாகிஸ்தான் (124) , இந்தியா (121), (120) மற்றும் தென்னாபிரிக்கா (120) அணிகள் உள்ளன.
Post a Comment