Header Ads



சாய்ந்தமருதுவில் நடைபெற்ற 'முதுசங்கள் நால்வர்' பாராட்டு விழா (படங்கள்)


(ஏ.எல்.ஜுனைதீன்)

  சாய்ந்தமருது – மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல், மஹல்லா பள்ளிவாசல்கள் மற்றும் பொதுமக்கள் இணைவில் 'முதுசங்கள் நால்வர்' பாராட்டு விழா இன்று 30 ஆம் திகதி அஸர் தொழுகையின் பின்னர் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் விமர்சையாக நடைபெற்றது.

  பெரிய பள்ளிவாசல் பிரதம நம்பிக்கையாளர் அல்-ஹாஜ் வை.எம்.ஹனிபா தலைமையில் இடம்பெற்ற இவ் விழாவில் பள்ளிவாசல்  தலைவர் மற்றும் பொருளாளர் ஆகிய பதவிகளிலும் கல்வித்துறையில் கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரியில் அதிபராக தொடர்ச்சியாகப் பல வருடங்கள் பணியாற்றி பெண்கள் கல்விக்கு பெரும் பங்களிப்புச் செய்த அல்-ஹாஜ் எம்.சீ.ஏ.ஹமீட்,  சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் தலைவராக இருந்து இப் பள்ளிவாசலைக் கட்டி முடிப்பதற்கு பெரும் பாடுபட்டவரும் பிரதேச அபிவிருத்தியில் அக்கறை காட்டியவருமான ஐ.எம் முகைதீன், இப் பள்ளிவாசலில் மிக நீண்ட காலமாக செயலாளராகச் சிறப்பான முறையில் கடமையாற்றிய அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.முகைதீன், பள்ளிவாசல் தலைவராகவும், மார்க்க பணிகளிலும் சிறப்பாகச் சேவையாற்றிய அல்-ஹாஜ் மெளலவி ஏ.ஏ.றஸாக்  ஆகியோர்களுக்கு இவர்களின் ஆளுமைப் பண்புகளையும் சமூகத்திற்காகச் செய்த சேவைகளையும் கெளரவித்து பாராட்டுப் பத்திரம், நினைவுச் சின்னம் என்பன வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

 இவ்வைபவத்தில் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல்கள் சபைத் தலைவர்  டாக்டர் எஸ்.எம்.ஏ அஸீஸ், முஸ்லிம் சமய, பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் முன்னாள் இராஜங்கச் செயலாளர் அல்-ஹாஜ் எஸ்.எச்.எம்.ஜெமீல், சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைப் பேரவையின் அம்பாறை மாவட்ட தலைவர் டாக்டர் அல்-ஹாஜ் எம்.ஐ.எம்.ஜெமீல், அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா தலைவர் மெளலவி எஸ்.எச். ஆதம்பாவா முன்னாள் பள்ளிவாசல் தலைவர் சட்டத்தரணி எம் சீ.ஏ அஸீஸ் ஆகியோர் உட்பட உலமாக்கள்,மரைக்காயர்மார்கள் மற்றும் மஹல்லாவாசிகள்  பெரும் எண்ணிக்கையில் கலந்து பாராட்டுப் பெறுபவர்களுக்கு கெளரவமளித்தனர்.



No comments

Powered by Blogger.