நியூஸிலாந்து பால் உற்பத்திகளுக்கு இலங்கையில் தடை
எம். எஸ். பாஹிம்
நியூஸிலாந்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பால் உணவு உட்பட பால் பண்ணை உற்பத்திகளில் நச்சுத் தன்மையை கொண்டதாக மாற்றும் பக்ரியா இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளதையடுத்து நியூஸிலாந்திலிருந்து தருவிக்கும் உணவு உற்பத்திகளை சந்தைக்கு விநியோகிப்பதை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
நியூஸிலாந்தில் உற்பத்தி செய்யப்படும் சில உணவு வகைகளில் வே புரோட்டீன் கொன்சண்ட் ரேட் இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மனிதனுக்கு கேடான பக்ரியா உள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் சுகாதார பிரிவுகளுக்கு எச்சரித்துள்ளது.
இதனையடுத்து முன்னெச்சரிக்கையாக நியூஸிலாந்திலிருந்து பொன்டோரா வர்த்தக நாமத்தில் தருவிக்கப்படும் உணவுப் பொருட்களை சந்தைக்கு விநி யோகிப்பதை சுங்கப் பிரிவு இடை நிறுத்தியுள்ளது. இவற்றில் மனிதனுக்கு பாதிப்பான பதார்த்தங்கள் உள்ளதா என ஆய்வு நடத்தப்பட்டு வருவதோடு சந்தையிலுள்ள அத்தகைய உணவுப் பொருட்களின் மாதிரிகளை இன்று (6) முதல் திரட்ட நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார சேவைப் பணிப்பாளர் மஹிபால ஹேரத் பணித்துள்ளார்.
பொன்டோரா வர்த்தக நாமத்தில் உள்ள உணவு உற்பத்திகளை பயன்படுத்த சீன அரசு தடை விதித்துள்ளது. பழுதடைந்த 1 புரதச் செறிவுடைய பாற்கட்டிகளை பயன்படுத்தி தயாரிக்கும் உணவுப் பொருட்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் அவுஸ்திரேலியா, சீனா, வியட்நாம், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடு களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து ஆராய உணவு ஆலோசனை குழுவின் விசேட கூட்ட மொன்று இன்று (6) நடைபெறவுள்ளது.
Post a Comment