மந்தனா இஸ்மாயில் அபேவிக்ரமவின் வீட்டு கொள்ளை - தொடர்பை மறுக்கிறார் நாமல்
சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் மந்தனா ஸ்மாயில் அபேவிக்ரமவின் வீட்டு கொள்ளைக்கும், தமக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பம்பல
ப்பிட்டியில் அமைந்துள்ள வீட்டிற்குள் பிரவேசித்த கொள்ளையர்கள் மந்தனாவை அச்சுறுத்தியதாகத் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் வீட்டை உடைத்து கொள்ளையிட முயற்சித்த சம்பவத்திற்கும், தமக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில இணைய தளங்களில் தமக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமக்கு தொடர்பான ஆவணங்களை தேடியே கொள்ளையர்கள் வீட்டுக்குள் பிரவேசித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கத்தியை விடவும் பேனை ஆபத்தான ஆயுதம் எனவும், அதனை சரியான முறையில் பயன்படுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். gtn
Post a Comment