இந்தியாவின் எண்ணெய்க் கப்பலை ஈரான் பிடித்தது
இந்தியாவின் எண்ணெய்க் கப்பலை ஈரான் பிடித்து வைத்துக்கொண்டுள்ளது. மேலும் கப்பலை விடுவிக்க வேண்டுமானால் சுமார் ஒரு மில்லியன் டாலர் தொகை பிணையாக வழங்கும்படியும் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய அரசின் எம்.டி. தேஷ் சாந்தி என்னும் பெயருடைய எண்ணெய்க் கப்பல் ஈராக் நாட்டின் பஸ்ரா துறைமுகத்தில் கச்சாஎண்ணெய் ஏற்றிக் கொண்டு இந்தியாவின் விசாகப்பட்டினம் நோக்கி புறப்பட்டு வந்தது. இந்தக் கப்பலை ஈரான் கடற்பரப்பில் வழிமறித்த ஈரானிய கடற்படை பந்தர்அப்பாஸ் எனும் துறைமுகத்துக்குக் கொண்டுச் சென்று வைத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அவையின் தடையை மீறி ஈரானிடம் தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நட்புநாடாக இந்தியா உள்ள நிலையில் ஈரானின் இந்நடவடிக்கை இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
இதற்கு விளக்கமளித்துள்ள ஈரான், அக்கப்பல் சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவித்ததாகவும், அதனால் பிடித்து வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் கப்பலை விடுவிக்க ஒரு மில்லியன் டாலர் தொகை பிணையாக வழங்கும்படியும் கோரிக்கை விடுத்துள்ளது. Inne
Post a Comment