Header Ads



சிறுவர் வன்முறைகளையும் தடுப்பதற்கான விழிப்புட்டும் செயலமர்வு


(எம்.ரீ.எம்.பாரிஸ்)

மட்டக்களப்பு மாவட்ட கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களையும், வன்முறைகளையும் தடுப்பதற்கான இரு நாற்கள் கொண்ட  விழிப்புட்டும் செயலமர்வும்,கிராம மட்ட சிறுவர்சபை அங்கத்தவர்களுக்கான தலைமைத்து பயிற்சி நெறியும் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக மன்டபத்தில் நடை பெற்றது.

சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்புத்திணைக்களத்தின் அனுசரணையுடன் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் எம்.சீ.அன்சார் தலைமையில் செயலகத்தின் சிறுவர் உரிமைகள் மேம்படுத்தல் உதவியாளர் பீ.எம்.எம்.காசிம் அவர்களின் ஒருங்கினைப்புடன் நடைபெற்ற இச் செயலமர்வின் வளவாளராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தின் சிறுவர் உரிமைகள் மேம்படுத்தல் உதவியாளர்களுக்கான மாவட்ட இணைப்பாளர் ப.குகதாசன் கலந்து கொண்டார்.

இன்று திங்கட்கிழமை 26.08.2013 நடைபெற்ற இச் செயலமர்வில் எட்டு(08)கிராம சேவகர் பிரிவுகளிலிருந்தும்  சிறுவர்சபைகளின் அங்கத்தவர்கள் பலர் கலந்து கொண்டனர். நாளை செவ்வாய்க்கிழமையும் இச் செயலமர்வு நடை பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.