யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சாரம்
(பாறூக் சிகான்)
வடமாகாண சபை தேர்தலில் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம்.சிராஸ் (11-08-2013) மாலை வலி மேற்கு பகுதியில் சாவல்கட்டு கிராம சேவக பிரிவில் வதியும் மக்களின் பிரச்சினை தொடர்பாக கலந்தரையாடல் மேற்கொண்டார்.
இதன் போது அப்பகுதி கோயில் பரிபாலன நிர்வாகிகள்,சிவில் சமூக பிரதிநிதிகள்,விளையாட்டு கழகங்கள்,உள்ளிட்ட அனைவரும் வேட்பாளரை சந்தித்து கலந்துரையாடினர்.
இச்சந்திப்பின் போது மக்களின் கோரிக்கைகள் வேட்பாளரினால் ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் ,அடிப்படை பிரச்சினைகள் உடனடியாக தீர்த்து வைக்கப்பட்டது.
இதேவேளை மற்று மொரு விஜயமாக வலி கிழக்கு கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கத்திரிப்பாய் பிரதேசத்திற்கு சென்றார். அங்கு பொதுமக்களுடனான சந்திப்பு மேற்கொண்டதுடன் தனது மக்கள் தொடர்பு அலுவலகத்தினையும் திறந்து வைத்தார்.
Post a Comment