நோன்பு கால பேரீத்தம் பழங்களும், பள்ளிவாசல் நிர்வாகமும்
(டீ.எம்.நப்ஹான்)
றமழான் மாதம் நோன்பு நோற்கும் இலங்கை முஸ்லிம்களுக்காக ஒவ்வொரு வருடமும் அரபு நாடுகளால் பேரீத்தம் பழங்கள் அனுப்பி வைக்கப்பட்டு அவை அந்தந்த பகுதி பள்ளிவாசல்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே.
அவ்வாறே இவ்வருடமும் இவை கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்பட்டன.தேர்தல் காலங்களில் இவ்வாறு வந்து சேரும் பழங்கள் அரசியல் வாதிகளின் கைகளுக்கு சென்றவுடன் அவர்கள் வழங்குவதன் மூலம் தாங்கள் செலவு செய்து வாங்கி வழங்குவதாக மக்களை நம்ப வைக்கின்றனர்.
இம்முறை வழங்கப்பட்ட பழங்களில் அதிகமானவை கட்டார் நாட்டு அன்பளிப்பாக காணப்பட்டது.இதில் உற்பத்தித்திகதி 15.07.2012 எனவும் முடிவுத்திகதி 15.07.2013 எனவும் காணப்பட்டது.அப்படியாயின் காலாவதியான பழங்கள் தான் விநியோகிக்கப்பட்டன.
ஏன் இவ்வாறான நிலைமை ஏற்படுகிறது? இவை முன்னரே அனுப்பபட்டு சேமித்து வைக்கப்பட்டதா?அல்லது நல்ல பழங்களை பெற்று விற்று விட்டு குறைந்த விலைக்கு வாங்கப்பட்டு எமது அரசியல் வாதிகளால் மாற்றப்பட்டதா?
சில பள்ளிகளில் இவை முறையாக விநியோகிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. சில பள்ளிகளில் வழங்கப்பட்ட பழங்கள் மாடு கூட திண்ண முடியாத அளவு காய்ந்து ,புழுத்து மரக்கட்டை போன்று காணப்பட்டது. இவை கடந்த ஆண்டு விநியோகத்திற்காக கொண்டு வரப்பட்டவையாகும்.
இதனால் இதனைப்பெற்ற மஹல்லா வாசிகள் அவற்றை பள்ளிகளில் தூக்கி எறிந்து விட்டு வந்தனர். சிலர் பள்ளிக்கு முன்னால் பரவி வைத்து விட்டுச்சென்றனர்.
இதிலும் கொடுமை என்னவென்றால் மிகவும் கஷ்டப்பட்ட ஏழைகள் கூட கஞ்சிக்கு காசு வழங்கிய ரசீட்டை காட்டியே இந்த காலாவதியான புழுத்த பழங்களை பெற வேண்டியிருந்தது. பரம ஏழைகளிடம் மிகவும் வற்புறுத்தி வாங்கும் கஞ்சிக்காசுகளை வைத்து சில பள்ளிகள் அவற்றை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவது வேறு விடயம்.
அறபு நாடுகளால் வழங்கப்படும் இவை முறையாக விநியோகிக்கப்பட வேண்டும்.இது விடயத்தில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மிகவும் கூடுதலான அக்கறை எடுத்து இவை முறையாக வழங்கப்படுவதை கண்காணிக்க வேண்டும்.
இது தொடர்பாக வரக்கூடிய மக்களின் முறைப்பாடுகளைப்பெற்று அவற்றை தீர விசாரித்து முறையற்ற விநியோகம் செய்யும் நம்பிக்கையாளர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் மக்களுக்கு சரியானது சரியாக சென்றடையும். பேரீத்தம் பழ விடயத்தில் அரசியல் கலப்பிற்கு இடமளிக்கக்கூடாது.
இம்முறை சவுதி அரேபியாவிலிருந்து 200 தொன் பேரிச்சம் பழம் இலங்கைக்கு வழங்கப்பட்டது ஒருபோதும் அரபு நாடுகளிலிருந்து நோன்பு மாதம் அதாவது நோன்பு ஆரம்பித்து முதல் வாரமே காலாவதியாகும் பொருளை வழங்கி வைக்கமாட்டார்கள் இது கண்டிப்பாக நமது நாட்டின் அரச சதியே தவிர அரபு நாடுகளில் இதுபோன்ற கீழ்த்தரமான வேலைகள் செய்யமாட்டார்கள். இவர்களுக்கு அல்லாஹ் எப்போது இவைகளுக்குரிய கூலியைக்கொடுக்கப்போகின்றான் என்று பிரார்த்தித்து பொறுமைகாப்போன் அது முஸ்லிம் அரசியல்வாதியானாலும் சிங்கள் அரசியல்வாதியானாலும் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும்.
ReplyDeleteஎதைத்தான் நேர்மையாகவும், ஒழுங்காகவும் செய்கிறார்கள்?
ReplyDeleteஹஜ் கோட்டா முதல் பேரீத்தம் பழங்கள் வரை பிரச்சினையாகவே உள்ளது.
பணிப்பாளர் சமீல் நளீமி இந்த விடயங்களிலெல்லாம் கவனம் செலுத்த வேண்டும்.
முஸ்லிம் சமய பண்பாட்டுத் திணைக்களத்தின் பிராந்திய உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டு திணைக்களத்தின் வளங்களையும், சம்பளத்தையும் பெறுகின்றவர்கள் உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் விவகாரங்கள் குறித்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதி காலத்தை விரயமாக்காமல் இவ்வாறான பள்ளிவாசல் நிர்வாகங்களில் கவனம் செலுத்தி மறு சீரமைப்புக்கான ஆய்வுகளையும், யோசனைகளையும் தெரிவிக்க வேண்டும்.
பள்ளிவாசல் நிர்வாகங்கள் காலாவதியானால் உடனடியாக புதிய நிர்வாக சபையை முறையாகத் தெரிவு செய்ய வேண்டும். தற்காலிக நிர்வாக சபைகள் இயங்குவதால் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
நேற்று புனித 'லைலத்துல் கத்ர்' இரவில் காத்தான்குடி முகைதீன் மெத்தைப்பள்ளிவாசலில் இப்தாரில் தொடங்கிய அமளி துமளி இரவு வணக்கங்களும் செய்ய முடியாதளவு அடிபிடி கைகலப்பு கூச்சல் குழப்பங்ளாக நீடித்தன. பொலீசாரும், இராணுவத்தினரும் வந்து அமைதிப்படுத்த வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமாகவுள்ளது.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
அரபு நாடுகளில் இருந்து வரும் பேரீத்தம் பழங்களை விநியோகிக்கும் பொருப்பை ஜம்இய்யதுல் உலமாவிடம் கொடுத்தால் நீதமாக பங்கு வைப்பார்கள்.
ReplyDeleteThese all rubbish things and nuisance activities are done by our all poloticians.Very shame, all matters are taking place by our roudy political members. politicism. No one escape infront of Almighty Allah in this cause
ReplyDeleteயா அல்லாஹ் இந்த திருட்டு மோசடியைச்செய்தவர்களுக்கு தகுந்த கூலியையும் வழங்கி அவர்களின் பெயர்களை மக்கள் முன்னிலையில் அம்பலப்படுத்துவாயாக.
ReplyDelete