Header Ads



எருக்கலம்பிட்டி மண்ணிற்கு றயீஸ் தலைமைத்துவம் வழங்குவார் - ஹக்கீம் நம்பிக்கை


மன்னார் மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் றயீஸ், கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சகிதம், புத்தளம் நாகவில் எருக்கலம்பிட்டி) கிராமத்தில் பொதுமக்களால் ஆரவாரமாக வரவேற்கப்பட்டு, பேண்ட் வாத்தியம் முழங்க ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். 

அங்கு கட்சியின் வன்னி மாவட்டத்துக்கான அலுவலகத்தை தலைவர் ஹக்கீம் திறந்து வைத்த பின்னர் அங்கு திரண்டிருந்த பெருந்தொகையினரான மக்கள் மத்தியில் உரையாற்றினார். 

அவ்வுரையின் போது மன்னார் எருக்கலம்பிட்டி மண்ணின் மைந்தன் மர்ஹூம் முன்னாள் அமைச்சர் நூர்தீன் மஷூரின் அளப்பரிய சேவைகளை பற்றி சிலாகித்துக் கூறிய அமைச்சர் ஹக்கீம், அவரைத் தொடர்ந்து அவ்வூர் மக்களுக்கு தலைமைத்துவம் வழங்க தொழில் அதிபர் றயீஸ் முன் வந்திருப்பதையிட்டு தமது கட்சியின் சார்பில் மகிழ்ச்சியைத் தெரிவித்தார். 

அத்துடன், அன்றைய தினம் அங்கு திரண்டிருந்த எருக்கலம்பிட்டி மக்கள் வெள்ளம், அப் பிரதேச மக்களின் வளமான எதிர்காலத்திற்கு கட்டயம் கூறுவதாகவும் கூறினார். 

'நேரடித் தெரிவு' என்ற அடைமொழியுடன் கட்சிக்கு துரோகம் இழைத்துவிட்டு வெற்றிலைச் சின்னத்தோடு சங்கமமாகியுள்ள நபர் மக்களால் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுவிடுவார் என்றும் சொன்னார். 

Dr Hafeez

No comments

Powered by Blogger.