Header Ads



முஸ்லிம் மக்கள் அரசுக்கு நல்ல பாடம் புகட்டுவர் - அசாத் சாலி நம்பிக்கை

நாம் அரசாங்கத்துடன் இணைந்து தேர்தலில் போட்டியிடவில்லை என தெரிவிக்கும் முஸ்லிம் காங்கிரஸ், தேர்தல் காலங்களில் வழமை போன்று பல்டி அடிக்கின்றது என கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதிமேயர் அசாத் சாலி தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் ஆட்சி வரலாற்றில் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியிலேயே நாட்டில் அதிக எண்ணிக்கையான மக்கள் பலியாகியுள்ளனர்.

நாட்டில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. தமிழ் மக்கள் எதற்கு வாக்களிக்க வேண்டும் என தீர்மானித்து விட்டனர். அந்த வகையில் முஸ்லிம் மக்களும் தமது வாக்குகளை யாருக்கு அளிப்பதென தீர்மானித்துள்ளனர்.

அரசாங்கத்துடன் இணைந்து தேர்தலில் போட்டியிட மாட்டோமென முஸ்லிம் காங்கிரஸ் வழமைபோன்று பல்டி அடிக்க ஆரம்பித்துள்து.

இம்முறை கண்டியில் தேர்தல் இடம்பெறுவதன் காரணத்தாலேயே ஜனாதிபதியை வரவழைத்து இப்தார் நிகழ்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஹக்கீமின் செயற்பாடுகள் அனைத்தையும் முஸ்லிம் மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர்.

முஸ்லிம்களின் பலத்தை கடந்த தேர்தல்களில் காட்டியிருந்தால் பள்ளிகள் மீது தாக்குதல்கள் தற்போது இடம்பெற்றிருக்காது.

இம் முறை தேர்தலில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அரசுக்கு நல்ல பாடம் புகட்டுவர். அந்தவகையில் வடக்கு மற்றும் கண்டியில் இடம்பெறும் தேர்தல்களில் வெற்றி பெற்று ராஜபக்ஷ ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம் என அவர் மேலும் தெரிவித்தார். vi

3 comments:

  1. Good request to all communities. Well done sir. Like you all politicians there will be a good and biasless rule for us definetly.

    ReplyDelete
  2. கிழக்குத் தேர்தலில் நீங்களும் சேர்ந்து மு.கா.வுக்குப் பெற்றுக் கொடுத்த வாக்குகளை அரசாங்கத்துக்கு விற்காமல் த.தே. கூட்டமைப்புடன் இணைந்து மாகாண ஆட்சியை ஸ்ரீ.ல.மு.கா. நிறுவியிருந்தாலும் கடந்த ஒரு வருடத்தில் இத்தனை பள்ளிவாசல்களின் மீதான அத்துமீறல் அச்சுறுத்தல்களும் நடைபெற்றிருக்காது.

    அதை மு.கா. தவற விட்டது மாத்திரமல்ல, பொது பல சேனாவின் இந்த வியத்தகு அட்டகாச வளர்ச்சிக்கும் அதுவே போஷாக்காக அமைந்தது.

    இம்முறை மத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் நீங்கள், அந்த மாகாண மக்களுக்கு மு.கா.வின் இவ்வாறான பல்டிகள், பொறுப்பற்ற அரசியல் முன்னெடுப்புக்கள், சமூக அக்கறையற்ற சுயநல செயற்பாடுகளை எல்லாம் அக்குவேறு ஆணிவேறாகத் தோலுரித்துக் காட்ட வேண்டும்.

    இலங்கையின் மத்தியிலிருந்து ஒலிக்கும் உங்களின் குரல் முழு இலங்கைக்கும் காத்திரமானதாக இருக்கும் என்றே பலரும் நம்பிக்கையுடன் உள்ளனர்.

    எனது ஈத் முபாரக் நல்வாழ்த்துக்களும் உங்களுக்கு உரித்தாகட்டும்!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  3. emathu Muslim makkal paadam pukatta maattaarkal; paadathiai maru pakkam puratti widuwaarkal - kaala kaalamaaka aneethi ilaikkap pattathu enraarkal, katchikal kaattik kodukkinrana enraarkal, maadram wara wendum enru sooluraippaarkal - but, sariyaana nayrathil urimaikalai theerkkamaana muriyil payan padutha maattaarkal.

    poruthirunthu paarpoome

    ReplyDelete

Powered by Blogger.