அவதானக் குறிப்பொன்றினை அனுப்பி வைக்குமாறு கடிதம்
மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி ரி.எல்.ஏ. மனாப் என்பவருக்கு எதிராக ஏ.எல்.எம். அஸ்லம் என்பவர் நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பில், அவதானக் குறிப்பொன்றினை அனுப்பி வைக்குமாறு கோரி, நீதிச்சேவை ஆணைக்குழுவின் பதில் செயலாளர் சிசிர ரத்நாயக்க - நீதிபதி ரி.எல்.ஏ. மனாபுக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
சுமார் 07 வருடங்களுக்கு முன்னர் மேற்படி நீதவான் மனாப் என்பவர் - அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவானாகக் கடமையாற்றியிருந்தார். இந்தக் காலப்பகுதியில் இடம்பெற்ற வழக்கு விசாரணையொன்றில் தனது விருப்பு வெறுப்புக்கிணங்க செயற்பட்டு, அநீதியாக நடந்து கொண்டார் என்றும், இதனால் அந்த வழக்கின் சந்தேக நபர்களுள் ஒருவரான - தான் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்து, மேற்படி அஸ்லம் என்பவர் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு ஒன்றினை அனுப்பி வைத்திருந்தார்.
இந்த முறைப்பாடு தொடர்பிலேயே – நீதிபதி ரி.எல்.ஏ. மனாபின் அவதானக் குறிப்பினை நீதிச் சேவை ஆணைக்குழு கோரியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக, அஸ்லம் என்பவர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கும் முறையிட்டிருந்தமை இங்கு நினைவு கொள்ளத்தக்கது.
Post a Comment