Header Ads



எங்கள் மீது சிரியா தாக்குதல் நடத்தினால் முழு பலத்துடன் பதிலடி கொடுப்போம் - இஸ்ரேல்

தங்கள் மீது சிரியா தாக்குதல் நடத்தினால் முழு பலத்துடன் பதிலடி கொடுப்போம் என்று இஸ்ரேல் அதிபர் ஷிமோன் பெரஸ் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

சிரியாவில் மக்களுக்கு எதிராக ரசாயன ஆயுதங்களை, அந்நாட்டு ராணுவம் பயன்படுத்தியுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சிரியா அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்த மேற்கத்திய நாடுகள் தயாராகி வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில், மேற்கத்திய நாடுகளுக்கு பதிலடி தரும் வகையில், இஸ்ரேல் மீது சிரியா தாக்குதல் நடத்தக் கூடும் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து ரசாயன ஆயுதத் தாக்குதலில் சிரியா ஈடுபட்டால், அதிலிருந்து தப்பிக்க, சுவாசக் கவசத்தை இஸ்ரேல் மக்கள் வாங்கி வருகின்றனர். மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தைத் தவிர்க்கும் வகையில் ஜெருசலேம் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஷிமோன் பெரஸ் பேசியது:

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் இஸ்ரேலுக்கு எந்தவிதமான பங்கும் இல்லை. இந்நிலையில், இஸ்ரேல் மீது சிரியா தாக்குதல் நடத்தினால், அதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம். தாக்குதலை எதிர்கொள்ளும் அளவுக்கு இஸ்ரேலிடம் வலிமையான ராணுவமும், பாதுகாப்பு அமைப்புகளும் உள்ளன.

இஸ்ரேல் மீது சிரியா, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு, பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பு ஆகியவை தாக்குதல் நடத்தக் கூடும் என்று மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதற்காக தவறான பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது எங்களுக்குத் தெரியும்.

சிரியாவில் நிகழ்ந்துள்ள சம்பவங்கள் (ரசாயன ஆயுதத் தாக்குதல்), மனித இனத்துக்கும், சர்வதேச சட்டங்களுக்கும் எதிரான குற்றமாகும். எனவே, அந்த விவகாரத்தில் தலையிட சர்வதேச சமூகம் விரும்புகிறது'' என்றார்.

3 comments:

  1. எவ்வளவு முட்டால்கள் இந்த முஸ்லிம்கள் என்று நினைத்து இவன் கதை அளக்கிறான் உண்மையில் 160கோடி முஸ்லிம்களில் 90 வீதமானவர்கள் இவனும் இவனுடைய கூட்டாளிகளின் புரஜெக்ட் படிதானே இஸ்லாத்தை பின்பற்றுகிறார்கள்.
    இவனுடன் கைகோர்துக்கொண்டுதான் சிரியா(ஈரான்)இவ்வளவும் செய்கிறான்

    ReplyDelete
  2. "ரசாயன ஆயுத தாக்குதல் மனித இனத்துக்கு அவலம் "

    இதை இந்த விஷசெடி சொல்லலாமா???? இஸ்ரேல் என்ற நாடு இல்லாவிட்டால் உலகில் அமைதி தானாக வரும். யா அல்லாஹ் வலை குடாவில் ஒரு போர் மூழுமாக இருந்தால். அதை கொண்டு இஸ்ரேலை பூண்டோடு அளித்து விடு நாயனே !!!!!!!!!!!!!!

    ReplyDelete
  3. இது வெறும் பேச்சில் மட்டும் தான், இலங்கையில் உள்ள மேர்வின் சில்வா இடைக்கிடை ஏதாவது உளறுவது மாதிரி தான் இந்த இஸ்ரேல் புராணம். இஸ்ரேல் மத்திய கிழக்கின் மேர்வின் சில்வா. சும்மா புஸ் வெடி

    ReplyDelete

Powered by Blogger.