இன, மத ரீதியாக இனி ஒருபோதும் பாடசாலைகள் ஆரம்பிப்பதில்லை -
(அஷ்ரப் ஏ சமத்)
இன ரீதியாகவோ, மத ரீதியாகவோ அல்லது ஆண் பெண் பால் என்ற வித்தியாசத்தில் இனி ஒருபோதும் பாடசாலைகள் இலங்கையில் ஆரம்பிப்பதில்லை. ஏற்கனவே அமுலில் உள்ள பாடசாலைகள் தொடர்ந்தும் இயங்கும்.
மேலும் கொழும்பு சாஹிராக் கல்லூரி,; கொழும்பு ஆணந்தாக் கல்லூரி பம்பலப்பிட்டி ஹிந்துக் கல்லூரி போன்ற பாடசாலைகளிலும் முவினம் சார்ந்த மாணவர்களும் அனுமதி பெற்று மூன்று மொழிகளிலும் மாணவர்கள் கற்கக் கூடிய வசதிகள் கொண்ட பாடசாலைகளாக மாற்றியமைத்து இத் திட்டத்தினை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த கல்வியமைச்சு தீர்மாணித்துள்ளது. என கல்வியமைச்சர் பந்துலகுணவர்த்தன தெரிவித்தாh
சமுக ஒருமைப்பாட்டிற்கான தேசிய கொள்கை கல்விக்கான அணுகுவழி பற்றிய 2வது கலந்துரையாடல் கருத்தரங்கும் கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நடைபெற்றது.
அங்கு உரையாற்றிய அமைச்சர் தெரிவித்தாவது,
நாடு முழுவதிலும் 500 தொழில் நுட்பப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும். ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு பாடசாலை ஐ. ரீ.(தொழில்நுட்ப படாசாலை நிறுவப்பட்டு வருகின்றது. இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு பிள்ளையும் கட்டாயம் 16வயது வரை பாடசாலைக் கல்வியை கற்க வேண்டும். இது சம்பந்தமாக ஏற்கனவே அமைச்சரவை தீர்மாணம்மொன்றை எடுத்து இதனை சட்டரீதியாக்கி உள்ளோம்.
கொழும்பில் உள்ள ரோயல், டி.எஸ், சாஹிராக் கல்லூரிகள் போன்று முன்று மொழிகளிலும் முவின மாணவர்கள் மாணவிகள் கற்கக் கூடிய விதத்தில் பாடசாலைகள் ஏனைய பிரதேசங்களில் ஏற்படுத்தப்படும் என கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்களி சமுக ஒருமைப்பாட்டினை மேம்படுத்துவதற்கான புதிய உபாய மார்க்கங்கள், இருமொழிப் பாடசாலைகளில் பாடவிதானங்கள் ஊடாக சமுக ஒருமைப்பாட்டினை மேம்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தல். கல்விக்கான அணுகுவழி உறுதிப்படுத்தல், பிள்ளைகள் இளைஞர்கள் சமுகத்தின் எதிர்காலம் மற்றும் சவால், போன்ற தலைப்புக்களில் பேராசிரியர்கள் விரிவுரையாற்றி புதிய கருத்துக்கள் கல்வித்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டிய விடயங்கள் பற்றி கல்வியமைச்சரின் கவணத்திற்கு கொண்டுவந்தனர்.
ஆரம்ப வைபவத்தில் கல்வியமைச்சர் பந்துலகுணவர்த்தன, தேசிய மொழிகள் மற்றும் சமுக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் கல்வியமைச்சின் செயலாளர் அநுர திஸ்ஸநாயக்க, பேராசிரியர் சுவர்ண ஜயவீர, கலாநிதி ஜெசீமா இஸ்மாயில், பேராசியரியர் சந்திரா குணவர்த்ன ஆகியோரும் விரிவுரைகளை நிகழ்த்தினர்.
This is to eradicate other cultures. Especilly Muslims will not agree this kind of systems which will destroy our Islamic and Muslims' culture. this system also a violence by the Majority against Minorities.
ReplyDelete