கிழக்கு மாகாணத்தில் பசும்பால் உபயோகம் அதிகரிப்பு
(ஏ.கே.ஏ.ரவூப்)
டீ.சி.டி. இரசாயன அச்சம் காரணமாக கிழக்கு மாகாணத்திலுள்ள அதிகமான மக்கள் பக்கற்றுக்களில் அடைக்கப்பட்ட பால்மா பாவனையிலிருந்து விடுபட்டு பசும்பால் பாவனைக்குத் திரும்பியுள்ளனர். இதனால் இம்மாகாணத்தின் அனைத்துப் பிரதேசங்களிலும் பசும்பாலுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சின் சமீபத்தைய அறிவுறுத்தலுக்கமைய தற்போது பலர் பசும்பாலை நுகர்வதறுகு ஆரம்பித்துள்ளனர். பசுமாடுகளுள்ள பிரதேசங்களில் முன்னைய காலங்களை விடவும் தற்போது பசும்பாலுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. அம்பாபறை மாவட்டத்தில் அறுபது ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு போத்தல் பசும்பால் தற்போது நூறு ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
தினமும் பசும்பால் நுகாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நுகாவோர் அதிகரிப்புக்கேற்ப பசும்பாலின் அளவை அதிகரித்துக் கொள்ள முடியாதுள்ளதாகவும் பசும்பால் கறவையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது இவ்வாறு இருக்க மொத்த வியாபார நிலையங்களில் அதிக பால்மா பக்கற்றுக்களை விற்பனைக்காக் கொள்வனவு செய்த பல சில்லறை வியாபாரிகள் குறித்த வியாபார நிலையங்களுக்கு மீண்டும் அவற்றைத் திருப்பிக் கொடுப்பதையும் காணக்கூடியதாவுள்ளது.
Post a Comment