செய்திக்கு பலன் கிடைத்தது - முசலிக் கிராம மக்களுக்கு காணி உரிமைப்பத்திரம்
(முசலியூர் கே.சி.எம்.அஸ்ஹர்)
எம்மால் யாழ் முஸ்லிம் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட முசலிக் கிராம மக்களின் காணிப்பிரச்சனைகளை மகிந்த சிந்தனையின் அடிப்படையில் அமைச்சர் றிசாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் அலிகான் சரீப் போன்றோரின் தீவிர முயற்சியின் காரணமாக முசலிக் கிராமத்தைச் சேர்ந்த 80 குடும்பங்களுக்கு 80 பேர்ச்சர்ஸ்கள் வீதம் காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முசலிப் பிரதேச செயலகம் செய்து வருகின்றது.
உரிய ஆவணங்களில் பயனாளிகளின் கையொப்பங்களைப் பெறும் நிகழ்வு முசலி தேசிய பாடசாலையில் முசலிப் பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் -ஏ.மனுவேற்பிள்ளை தலைமையில் நடைபெற்றது இதில் முசலிப் பிரதேச கிராம உத்தியோகத்தர் திருமதி ஆன்.றுக்சினி தோமஸ் அவர்களும் முசலிப் பிரதேச செயலக நில அளவை உதவியாளர் ஏ.எம்.நஜாத் அவர்களும் கலந்து கொண்டனர். பெருந் தொகையான முசலிப் பிரதேச மக்கள் நிகழ்வில் கலந்து கொண்டதைக் காணக் கூடியதாக இருந்தது. விரைவில் இவர்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட உள்ளது.
இப்போதுதான் பத்திரத்தில் கையொப்பம் வாங்கப்பட்டுள்ளது.
ReplyDeleteவாக்குச் சீட்டில் புள்ளடி போட முன்னர் உரியவர்களுக்கு உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படாத பட்சத்தில் இதுவும் ஒரு ஏமாற்று வேலையாகவே அந்த மக்களால் கருதப்படும். எனவே துரிதமாக வழங்குங்கள்!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-