'குடிப்பதற்கு தண்ணீர் கேட்ட மக்களைச் சுட்டு வீழ்த்தும் அளவிற்கு அரசு கொடூரமாகியுள்ளது'
(ஏ.எல்.ஜுனைதீன்)
குடிப்பதற்கு சுத்தமான தண்ணீர் கேட்ட மக்களைச் சுட்டு வீழ்த்தும் அளவிற்கு அரசு கொடூரமாகியுள்ளது. யுத்தத்தை வெற்றி கொள்வதற்கு பிரபாகரனைச் சுட்டதுபோல் இராணுவத்தை அனுப்பி அரசாங்கம் வெலிவேரிய மக்களையும் சுட்டுள்ளது. பொது மக்களின் ஆர்ப்பாட்டங்களில் இராணுவம் தலையிடுவதை எந்தவொரு ஜனநாயக அரசும் ஏற்றுக் கொள்ளாது. என ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் சஜீத் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சஜீத் பிரேமதாச இங்கு தொடர்ந்து பேசுகையில் மேலும் தெரிவித்ததாவது,
பொது மக்கள் குடிக்க சுத்தமான தண்ணீர் கேட்டது ஒரு பாரிய குற்றமா? அல்லது தேசத் துரோகச் செயற்பாடா? என வினவுகின்றோம். அங்கு பெரும் தொகையான இராணுவத்தை அனுப்பி அப்பாவி மக்களை ஓடஓடத் தாக்கியும் துப்பாகியால் சுட்டும் மிகவும் மோசமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இவ்வாறு நடந்து கொண்ட ஜனநாயக அரசொன்றை இலங்கையில்தான் நாம் பார்க்கின்றோம்.
இச் சம்பவமானது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதாகும். இச் சம்பவத்தை அமச்சர் விமல் வீரவன்ச போன்றவர்கள் சர்வதேச சதி எனச் சுட்டிக்காட்ட முயற்சிக்கக்கூடாது. பொது மக்களின் உரிமைகளுக்காக போராட்டம் நடத்த அவர் முன் வரவேண்டும். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகிற்கு எடுத்துச்சொல்லுங்கள் இச்செய்தியை. நாட்டுமக்கள் இலங்கைத்தலைவர் மற்றும் அவருடைய சகோதரினால் படும் நெருக்கடிகளை.
ReplyDeleteகழுதைக்கு வாக்கப்படால் அப்படித்தான்
ReplyDelete