ஆரிப் சம்சுடீனின் 'வாழ்வின் ஒளி'
(எம்.எம்.ஏ.ஸமட்)
அடிப்படை வசதியற்ற மக்களின் வாழ்வாதாரத் கட்டியெழுப்பி அவர்கள் வாழ்வில் ஒளியேற்றவே 'வாழ்வின் ஒளி' செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுவதாக மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீனின் 'வாழ்வின் ஒளி' செயற்றிட்டத்தின் கீழ் 120 பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் வைபவம் செவ்வாய்க்கிழமை(6) பிற்பகல் 3.30 மணிக்கு நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் ஆராதனை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை, கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் விமலவீர திஸ்ஸநாயக்க ஆகியோர்களுடன்; மாகாணசபை. மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபைகளைச் சார்ந்த மக்கள் பிரதிநிதிகளும் பயனாளிகளும் கலந்து கொள்ளவுள்ளவுள்ளனர்.
இவ்வாழ்வின் ஒளி செயற்றிட்டம் தொடர்பில் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
வாக்களித்த மற்றும் வாக்களிக்காத மக்களில் அடிப்படை வாழ்வாதரத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத குடும்பங்களின் வாழ்வாதாரத் தேவைகள் தரவுகளினூடாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இத்தேவைகளை அரச மற்றும் தனியார் நிருவனங்களினதும் எனது பன்முக வரவு - செலவு நிதியினூடாகவும் நிறைவேற்றி வைப்பதற்காக வாழ்வின் ஒளி எனும் செயற்றிட்டம் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக, கல்முனைக்குடி மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களைச் சேர்ந்த ஏறக்குறை 30 குடும்பங்களுக்;கு குழாய் நீர் இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் இம்மக்களின் போக்கு வரத்து மற்றும் தொழில் நடவடிக்கைகளை மேம்படுத்தும் பொருட்டு இப்பிரதேசங்களில் வீதி விஷ்தரிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வாழ்வின் ஒளி செயற்றிட்டத்தின் கீழ் பிரதேசம்தோரும் மக்களின் வாழ்வாதாரத் தேவைகளை பூர்த்தி செய்து வகைக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களுக்கமைய, நிந்தவூர் மற்றும் அட்டப்பளப் பிரதேசங்களைச் சேர்ந்த 35 குடும்பங்களுக்கு குழாய்நீர் இணைப்புக்களும், வறுமைக் கோட்டின் கீழுள்ள 10 குடும்பத்தலைவிகளுக்கு அவர்களின் தொழில் முயற்சிகளுக்காக 10 தையல் இயந்திரங்களும் அத்துடன் 10 விவசாயிகளுக்கு மருந்து தெளிக்கும் உபகரணமும் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு 100 மண்வெட்டிகளும் இவவைபவத்தின் போது வழங்கப்படவுள்ளதுடன் அடிப்படை வசதியற்ற மக்களின் வாழ்வாதாரத் தேவைகளைக் கட்டியெழுப்பி அவர்கள் வாழ்வில் ஒளியேற்றவே இவ் 'வாழ்வின் ஒளி' செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் இத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமெனவும் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment