Header Ads



கிழக்கு மாகாண சபை அமர்வில் சர்ச்சை

வட மாகாண அமைச்சின் செயலாளர்கள் கிழக்கு மாகாண சபை அமர்வை பார்வையிட்டதில் சபையினுள் சர்ச்சை

கிழக்கு மாகாண சபை அமர்வு இன்று 27 ஆம் அதிகதி காலை 9.40 மணிக்கு தவிசாளர் ஆரியவதி தலைமையில் இடம்பெற்றது.

இன்றைய அமைர்வை பார்வையிடுவதற்காக வட மாகாண அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் குழு சபைக்குள் அமர்ந்து சபை நடவடிக்கைகளை பார்வையிட்டனர். அவ்வாறு பார்ப்பதற்கு சபையினுள் அமர்த்தப்பட்ட அதிகாரிகள் சபை சட்டத்துக்கு முரனானது என்று ஆளும் தரப்பு உறுப்பினர் ஜெயந்த விஜயசேகர சபைக்கு முன்வைத்தார்.

இதனைத் தொடர்ந்து ஆளும் தரப்பு, எதிர் தரப்பு உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது சபை அமர்வை 10 நிடங்கள் ஒத்திவைப்பதாக தவிசாளரினால் அறிவிக்கப்பட்டது. அதன் பின் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டுமாறு கோரினர். கட்சி தலைவர்களின் கூட்டம் இடம்பெற்று பின்பு சபையினுள் அமர்ந்திருந்த உயரதிகாரிகளின் கதிரைகளை மாகாண சபை ஊழியரினால் அப்புறப்படுத்தப்பட்டு அவர்களை பார்த்திருப்பு மண்டபத்துக்குள் அமர்த்தப்பட்டது.

பின்னர் சபை கூடி ஆளும் தரப்பு, எதிர் தரப்பு உறுப்பினர்களின் வாதங்களும், தனிநபர் பிரேனைகளும் முன் வைக்கப்பட்டு சபை தொடர்ந்தும் இடம்பெறுகின்றது

No comments

Powered by Blogger.