நவநீதம்பிள்ளை இலங்கை வந்தார் - மஹிந்த பெலாரஸ் பறந்தார்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று காலை பெலாரஸ் நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக, அரசாங்கத்தின் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று காலை சிறிலங்காவுக்குப் வந்த நிலையில், மகிந்த ராஜபக்ச அதற்கு முன்னதாக, பெலாரஸ் நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். மகிந்த ராஜபக்ச மூன்று நாட்கள் பெலாரஸில் தங்கியிருப்பார்.
இதன்போது, அந்த நாட்டின் அதிபர் அலெக்சான்டர் லுகாசென்கோ, பிரதமர் மிகையில் மியாஸ்னிகோவிச், பெலாரஸ் தேசிய சட்டசபையின் தலைவர் அனரோலி ருபினோவ், உள்ளிட்டோரைச் சந்தித்து இருதரப்புப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
நவநீதம்பிள்ளைக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு வரும் 30ம் நாள் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment