அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் தாஸிம் தற்காலிக பணிநீக்கம்
(ஹனீக் அஹமட்)
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எம். தாஸிம் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. அரசசேவை ஆணைக்குழு – மேற்படி வைத்திய அத்தியட்சகரைப் பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதோடு, குற்றப்பத்திரத்தினையும் வழங்கியுள்ளது.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எம். தாஸிம் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. அரசசேவை ஆணைக்குழு – மேற்படி வைத்திய அத்தியட்சகரைப் பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதோடு, குற்றப்பத்திரத்தினையும் வழங்கியுள்ளது.
வைத்திய அத்தியட்சகர் எம்.எம். தாஸிம் பல்வேறு ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வந்தன.
ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவினர் மற்றும் சுகாதார அமைச்சு அதிகாரிகள் மேற்படி விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையினால் சுகாதார அமைச்சின் நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 90 லட்சம் ரூபாய் பெறுமதியான வைத்திய உபகரணங்கள் மோசடி செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
மேற்படி 90 லட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கென சுகாதார அமைச்சிலிருந்து பணம் பெறப்பட்டிருந்த போதும், கொள்வனவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் மருத்துவ உபகரணங்கள் எவையும் வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்படவில்லை எனவும், வைத்தியசாலை ஆவணங்களில் அவை பற்றிய பதிவுகள் எவையும் இடம்பெறவில்லை எனவும் கூறப்படுகிறது.
சுகாதார அமைச்சு நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட மருத்துவ உபகரணங்கள் மறைக்கப்பட்டு, அவைகளுக்குப் பதிலாக – யுனிசெப் அமைப்பிடமிருந்து பெறப்பட்ட மருத்துவ உபகரணங்கள் வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இதேவேளை, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எம். தாஸிம் என்பவர் - தனது தனிப்பட்ட தேவைகளுக்காக 04 தடவைகள் வெளிநாடு சென்றிருந்ததாகவும், அப் பயணங்களின்போது, அனுமதிக்கப்பட்ட விடுமுறையினை விடவும் 30 நாட்கள் அதிகமாக வெளிநாடுகளில் தங்கிருந்ததாகவும் தெரியவருகிறது.
மேலும், குறித்த அத்தியட்சகர் வெளிநாட்டில் மேலதிகமாகத் தங்கியிருந்த 30 நாட்களும் கடமையில் இருந்ததாகக் காட்டியுள்ளதோடு, அந்த நாட்களுக்குரிய சம்பளம், மேலதிகக் கொடுப்பனவுகள் மற்றும் பிரயாணக் கொடுப்பனவுகள் உள்ளிட்டவற்றினைப் பெற்றுள்ளார் எனவும் கூறப்படுகிறது. இவ்வாறு இவர் பெற்றுக்கொண்ட தொகையானது சுமார் 01 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயாகும்.
இதேவேளை, குறித்த அத்தியட்சகர் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் பொருட்டு – அக்கரைப்பற்றிலிருந்து கொழும்புக்கு தனது குடும்பத்துடன் பயணிப்பதற்காக 08 தடவைகள் வைத்தியசாலைக்குச் சொந்தமான அம்புலன்ஸ் வண்டியைப் பயன்படுத்தியதாக விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தப் பயணத்துக்காக வைத்தியசாலையின் நிதியிலிருந்து சுமார் 03 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
மேற்படி அத்தியட்சகர் தாஸிம் 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் தனக்கு அனுமதிக்கப்படாத நிதியிலிருந்து சுமார் 02 மில்லியன் ரூபாவினை மோசடியாகப் பெற்றிருந்தார் எனவும் தெரியவருகிறது.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில், ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்ததையடுத்து, வைத்திய அத்தியட்சகர் தாஸிம் - மோசடியாகப் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் ஒரு தொகைப் பணத்தினை மீளவும் வைத்தியசாலைக்குச் செலுத்தியிருந்தார்.
வைத்தியசாலையிலிருந்த மோசடியாகப் பெற்றுக் கொண்ட 09 லட்சத்து 89 ஆயிரத்து 750 ரூபாவினை வைத்திய அத்தியசட்சகர் தாஸிம் மீளவும் வைத்தியசாலைக்குச் செலுத்தியதாக தெரிய வருகிறது.
மேற்கண்ட நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே, தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எம். தாஸிம் அவருடைய பணியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
வாழ்த்துக்கள்.
ReplyDeleteயா அல்லாஹ் யார் யாரெல்லாம் பொதுமக்களின் நிதிகளில் மோசடிசெய்து தன்வயிறு வளர்த்தார்களோ அவர்களை இம்மையில் கேவலப்படுத்துவதோடு மறுமையில் ஜெஹன்னம் என்ற நரகத்தில் எறிந்துவிடு ரஹ்மானே.
ReplyDeleteமற்றவங்க குறைகளை நாம் மறைத்தால் அல்லாஹ் நம்ம குறைகளை மறைப்பான். உண்மை நிலைமை தெரியாமல் வதந்திகளை பரப்புவது பாவம்.
ReplyDeleteமறைவானதை அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே!!
இன்னமும் இருக்குங்கோ...
ReplyDeleteவினை விதைத்தவன் வினை அறுப்பான்.
This is a serious allegation. Was the credibility verified by Jaffna Muslim
ReplyDeletePublic trust. Be afraid of Allah's Punishment
ReplyDeleteஇப்பிடியெல்லாம் எங்க காத்தான்குடி வைத்தியசாலையில் இருந்து சுனாமிக்குப் பின்னர் கொண்டு செல்லப்பட்ட இலட்சக்கணக்கான கூரைக் கைமரங்கள் பற்றியெல்லாம் ஜனாதிபதி புலனாய்வுக்குழுவினர் விசாரணை நடாத்த முன வரமாட்டார்களா?
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
இது வெறும் நெத்தலி மட்டும்தான். ஆனால் பெரிய சுறா இன்னும் கிளம்பாமல் படுக்குது என்றால் பாருங்களேன். !!!
ReplyDeleteஇந்த இடைனிருத்தம் எப்போதோ நடைபெற்றிருக்கவேன்டும். தெய்வம் நின்டறுக்கும், எனவே தாமதமாக்கும். அக்கரைப்பற்று வைத்தியசாலை சிறந்த சேவை செய்கிறது. பாராட்டுக்கள்.அரசின் அபிவிருத்தி சகலபிரதேசங்களுக்கும் பிரிக்கப்படும்போது மக்களை அதுஎவ்வாறேனும் சென்றடையும். வரி செலுத்தும் மக்களுக்கு அரச சேவை சென்றடைகிறது ஆனால், ஊளல்கள் ஆரம்பத்திலிருந்தே நடைபெறுகிறதென்பது சிலருக்காவது தெரிந்த விடயமே. மட்டுமல்ல அமைச்சருக்கு தெர்தல் ஊளியம் செய்யவே டாக்டர் தாசீம் தலைமையில் அடிபாட்டி குழு ஒன்று அங்கிருக்கிறது. அம்புலன்சில் வாக்காளர்களை ஏற்றி இறக்கீருக்கிறார்களென்றால் என்ன கேவலமான வேலை ஒரு வைத்தியர் செய்வித்திருக்கிறார். எல்லாம் பதவிக்காக. அரசியல் அதிகாரம் தன் பின்னால் இருக்கிறதென்பதர்ற்காக இப்படி கண்மூடித்தனமாக நடப்பதா? இதற்கு அங்குள்ள பட்டாளம் உடன்தை. படித்தவர்கள் இவ்வாறு பிழைகளை அதுவும் வைத்துயசாலையில் இருந்து செய்வதென்றால் அந்தா நேயாளிகள் பாவம். மக்களும் இவர்களையும் இவர்கூட்டத்தையும் அடையாளம்காணவேன்டும்
ReplyDeleteDr, Thaseem Killed his family respect and his father's good name with in the society, if these alegations are true against him, he must declare him self and must enjoy the jail term and he shold not touch stethescope forever.\
ReplyDeleteI remember his school days, he challanged ex proincipal Mr. Uthumalebbe. good luck Dr. Thseem.\
if the alegations are not true, may alimighty Allah will save him.
Dear Mohamed
DeleteWhat is family did for this? What his father did for this?
Are you sure or do you know any thing happening in AKP hospital and internal politics and Thavam team?
This What Akpers , if you bring a MS from other area or Sinhalese , our people will was his toilet also. But they will not allow our people to lead the society
Best example for people like you is what happens to Dr. Muzathick Eng during the Dean of Eng faculty election on SEUS last week
Allah know the best
Lets not just jump into conclusions. Any allegation should be proven beyond doubt. Till then let us be silent. We have to face the day of judgement
ReplyDelete2000ம் ஆண்டு தொடக்கம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் நடந்தவைகளைக் கிளறினால், முக்கியமாக சுனாமியின் பின் நடந்த கையாடல்களை விசாரிக்க ஏதாவது செய்தார்கள் என்றால் இன்னும் பல தாடிகளின் பின்னால் உள்ள ரூபங்கள் வெளிப்படலாம்
ReplyDeleteThe great, Almighty Allah will know the secret and reality of this incident.
ReplyDeleteகம்ரான் பட், நீங்க சொல்றது சரி இதில் சிங்களவன், தமிழன், முஸ்லிம் என்பது அல்ல பிரச்சினை. பிரச்சினை குற்றம் புரிந்தது. இதற்கும் மதத்திற்கும் இனத்திற்கும் சம்மந்தமில்லை. வினை வித்தத்தால் அறுவடையும் அதுதான்.
ReplyDeleteஜப்னா முஸ்லிம் தீர விசாரிக்க வேண்டும் என்ற தொனியில் எழுதி தாசிம் அவர்களுக்காக வக்காலத்து வாங்கியிருக்கும் சில அன்பர்களுக்காக!
தாசிம் அவர்களை பாதுகாப்பதில் உங்களுக்குள்ள அக்கரை என்ன? தாசிம் அவர்களின் திருவிளையாடல்களின் ஒரு பகுதியே நீங்கள் ஜப்னா முஸ்லிமில் வாசித்தது! தாசிம் அவர்களின் சட்டவிரோத, தன்னிச்சையான, தொழில்தர்மம் மறந்த எத்தனையோ விடயங்கள் இன்னும் ஜப்னாமுஸ்லிம் அறியாதவை. அவைகளில் சில
அ) இவர் படித்த சண்டியன் அதாவுல்லாவின் நெருங்கிய நண்பர் என்பதால் சண்டித்தனத்தை வைத்திய சாலையிலும் பொது இடங்களிலும் வெட்கமில்லாமல் ரவுடித்தனம் காட்டுபவர்.
ஆ) இவர் அதாவுல்லாவின் வால் என்பதால் தேர்தல் நேரம் வைத்தியசாலை வாகனங்களை எந்தப் பயமும் இல்லாமல் கூச்சமும் இல்லாமல் அரசியல் தேவைக்காகப் பாவிப்பது. வாக்களிக்க வாக்காளர்களை ஏற்றி இறக்குவது. இன்னும் அவரரே கொண்டக்டர் மாதிரி புட்போர்டில் நின்றுகொண்டு செல்வது.
இ) மற்றவர்களுக்கு முகத்தில் பாய்ந்து எந்த அடிப்படை நாகரிகமும் இல்லாமல் திட்டுவது. இப்படித்திட்டி தான் ஒரு நேர்மையானவன் போல் மக்கள் மத்தியில் காட்ட முனைவது.
ஈ) காடயன்போல் வைத்தியசாலையில் வாரவக்கட்டு, செருப்பு கொண்டு வேலையாட்களைத் தாக்குவது.
இப்படிக் கூறிக்கொண்டே போகலாம்! இருப்பினும் இவர் தப்பி விடுவார். காரணம் இவரைத் தப்ப வைப்பதற்கான வேலையில் அதாவுல்லா குழுவினர் முழுமையாக ஈடுபட்டு கொண்டிருகின்றனர்.
பாவம் இவர் குடும்பம் இவரின் தந்தை ஒரு புனிதமான மனிதானகத்தான் வாழ்ந்தார். அவர் உயிருடன் இருந்திருந்தால் இப்படி ஒரு பிள்ளையைப் பெற்றதற்காக அவர் உயிரை விட்டிருப்பார்.
தாசிம் அவர்களே உங்களால் புண்பட்டவர்கள், மனம் காயப்பட்டவர்கள் எல்லோரிடம் சென்று மனம் திறந்து மன்னிப்புக் கேளுங்கள். அரசாங்கம் மன்னிக்காவிட்டாலும் அல்லாஹ் மன்னிப்பான்.
Hello s v
DeleteI respect jaffna muslim website and believe the news is always credible. I want to make sure this news is not just a character assassination. If I come across any such mud slinging I have the right to question it. Next time such a thing may be against you. Who knows. learn to Respect others rights too please.
Hello Kamran Butt,
ReplyDeleteI do not know what is happening in AKP Hospital, But Dr. Thaseen is not a lay man, he is a Doctor. if Thavam or Athaullah play out and used people and made game plan , every things for thier political gain at the same time these educated people ate thier brain and working behaind these politician, this is what you are trying to tell me????
Do you know father of Thaseem??? Who is Musthafa Master? what he did for the student society and bulit mosques in AKP?? we suprised that how come Dr. Thaseem trapped in to the rubbish game?
how can we trust those educated people, DS, DO. Engineers and Drs list are added in such bad list, what kind of education they have?? I like to advise Dr. Musathik also if he find any game against him in Oluvil university he must safe his respect and getout from there to rejoing in Katubedda, are you trying say again that every one need leading position in all places to trap in such cases??
Hello Mohamed Bawa
ReplyDeleteThank you for your reply and I very we'll know that you are not working in the island and living some where (sau..........) out side the country .
No doubt that if you work here in Srilanka you may also trap in the same situation bcoz you also very greedy like your friend Eng. Nai................
You all just targeting to achieve your goals buying lands in Akp, Colombo, Thaikka Nagar paddy idles here and there, but just commenting on who all really working for the community.
Better shut your mouth or I can put more abt you.
பெற்றவர்களை தயவுசெய்து குறைகூற வேண்டாம் அவர்கள் பிள்ளைகளைப் பெற்று ,நன்றாக வளர்த்து,இஸ்லாத்தைப்போதித்து,டாக்டர் ஆகுமளவிற்கு நல்ல கல்வி கொடுத்து அவர்களை அல்லாக்கி விட்டிருக்கின்றார்கள்,டாக்டர் தாசீம் செய்த காரியங்களுக்கு எந்த வகையிலும் பெற்றோர்களும் குடும்பத்தினரும் பொறுப்பல்ல,தயவுசெய்து இவரது குடும்பத்தினரை அநியாயமாக இழுக்க வேண்டாம்.
ReplyDeleteகூடுவாரோடு கூடி இவர் புத்தி சீரழிந்து தனது தந்தை இந்த சமூகத்துக்கு செய்ததை தலைகீழாக மாற்றிச்செய்திருக்கின்ற இவர் சக ஊழியர்களிடத்தில் நல்லபிப்பிராயம் ஏற்படுமளவிற்கு நடந்துகொள்ளவில்லை என்பது தெளிவான உண்மை.ஏனென்றால் இங்கு கூறப்பட்டிருக்கின்ற கருத்துக்களில் அநேகமானவை உண்மையானவே!
மக்களிற்கான பணத்தை அநியாயமாக தமது சொந்தமாக்க முயன்ற யாரும் சமூகத்தில் உருப்பட்ட சரித்திரம் கிடையாது,
இதுபோல பொது நிறுவனங்களை சாப்பிட்டுக்கொண்டிருக்கின்ற சகலருக்கும் நடக்க வேண்டும்.அப்பாவி மக்களை அரசும் ஏமாற்ற அரச ஊழியர்களும் ஏமாற்றினால என்னாவது...........?