யாழ்ப்பாண மாநகர சபை முஸ்லிம் உறுப்பினர்கள் இதையாவது கவனிப்பார்களா..?
(பாறூக் சிகான்)
யாழ் பழைய சோனகத்தெரு பகுதியில் உள்ள அபூபக்கர் பள்ளிவாசலின் முன்னால் உள்ள வடிகால் சீரற்ற நிலையில் காணப்படுகிறது. மிகவும் மோசமாக உடைந்த நிலையில் இவ்வடிகால் காணப்படுவதால் நீர் தேங்கிக்காணப்படுவதுடன்,துர்நாற்றமும் வீசுகிறது.
தற்போது இப்பிரதேசத்தில் மழை ஆரம்பித்துள்ள நிலையில் தொற்று நோய்கள் ஏற்படும் அடையாளங்கள் ஏற்பட்டுள்ளன. யாழ் மாநகர சபை வடிகால்களை தற்போது புனரமைத்து வரும் நிலையில் இதனையும் விரைவாக புனரமைக்க நடவடிக்கை எடுக்கமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
ஏற்கனவே அளிக்கப்பட்ட வாக்குகளுக்கு இவர்கள் இதைக்கூடச் செய்யாமல்தானா இப்போது மாகாண சபைக்கு மக்களின் அங்கீகாரத்தைக் கோரி நிற்கின்றனர்..?
ReplyDeleteவெட்கக் கேடு!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-