Header Ads



பலிபூஜைக்காக அடைத்துவைக்கப்பட்டிருந்த சேவல்களை விடுவித்த மேர்வின் சில்வா

(Tm) பொதுமக்கள் தொடர்பாடல் மற்றும் பொதுமக்கள் உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வா  சிலாபம், முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்திற்கு இன்று சனிக்கிழமை சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.

பூஜைகளை முடித்துக்கொண்டதுடன் அங்கு பலிபூஜைக்காக அடைத்துவைக்கப்பட்டிருந்த இரண்டு சேவல்களையும் விடுவித்தார்.

இதற்கு பின்னர் ஆலயத்திற்கு சேவல்களை கொண்டுவருவதற்கு இடமளிக்கவேண்டாமென்றும், ஆலயத்திற்கு வெளியில் வைத்தே அவற்றை விட்டுவிடுமாறும் ஆலய நிர்வாகத்தினரிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

1 comment:

  1. சேவல்களை விடுவித்து, இந்த ஆளை உள்ளே அடைத்து வைத்து, காலையில் கூவச்சொல்லவண்டும்

    ReplyDelete

Powered by Blogger.