Header Ads



மனித மூளையை உருவாக்கி சாதனை

மனித மூளையின் அமைப்பையும், அதன் செயல்பாட்டையும் அறிந்து கொள்வது இன்று வரை சவாலாகத்தான் உள்ளது.

தற்போது சிறிய அளவிலான மனித மூளையை, ஸ்டெம் செல் மூலம் ஆய்வகத்தில் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். இந்த ஆராய்ச்சி முழு வெற்றி அடையும் பட்சத்தில், நரம்பு கோளாறுகளை எளிதில் சரி செய்யலாம்.

மூளையை ஆய்வகத்தில் உருவாக்கும் நோக்கில், அதற்கான வேலையை ஆஸ்திரிய நாட்டு விஞ்ஞானிகள் துவக்கினர். இந்த ஆராய்ச்சியில் சிறிய அளவிலான மூளை வளர்ச்சி சிறப்பாக இருந்தது. முதல் 15-20 நாட்களில் "செரிபரல் ஆர்கனாஸ்டு' பகுதி வளர்ச்சி நன்றாக இருந்தது. அதனைச்சுற்றி "செரிபரல் வென்ட்ரிகல்' திசு வளர்ச்சியும் சிறப்பாக இருந்தது. 20-30 நாட்களில் செரிபரல் கார்டெக்ஸ், ரெட்டினா, மெனின்க்ஸ் மற்றும் குரோய்டு பிளக்சிஸ் ஆகியவையும் வளர்ந்திருந்தன. இரண்டு மாதங்களில் மூளையின் வளர்ச்சி ஓரளவு முழுமையடையும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதன் செயல்பாட்டை 10-12 மாதங்கள் கண்காணித்த பிறகு தான் ஆராய்ச்சி முடிவுகள் தெரிய வரும்.

No comments

Powered by Blogger.