Header Ads



கொழும்பில் ஹிஸ்புல்லாவின் புதிய அலுவலகம்


(றிஸ்கான் முகம்மட்)

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் புதிய அலுவலகம் கொழும்பு 10 ரி.பி. ஜாயா மாவத்தையில் அமையப் பெற்றுள்ளதாக அமைச்சின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்புதிய அலுவலகத்தில் கடந்த வௌ்ளிக்கிழமை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தனது கடமைகளை ஆரம்பித்தார்.

அத்துடன் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சின் அதிகாரிகளும் குறித்த புதிய அலுவலகத்தில் தமது கடமைகளை ஆரம்பித்தனர். இந் நிகழ்வில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் பிரதியமைச்சரின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.  


No comments

Powered by Blogger.