கொரிய அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் கல்முனை மேயர் சந்திப்பு
(அகமட் எஸ். முகைடீன்)
கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், இலங்கைக்கு விஜயம் செயதுள்ள கொரிய அரசாங்கத்தின் பௌதீக திட்டமிடலுக்கான பிரதான ஆய்வு நிறுவனமான கிறிஸ் அமைப்பின் பணிப்பாளர் ஜின்ஜோல்-ஜுலுடன் இன்று (26.08.2013) காலை முதல்வர் அலுவலகத்தில் கலந்துரையாடினார்.
ஆசிய மன்றத்தின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத்அலி, பொறியியலாளர் ஹலீம் ஜெளசி, ஆசிய மன்றத்தின் ஆசிய அபிவிருத்தி அதிகாரி செல்வி யங்கிம், ஆசிய மன்றத்தின் சிரேஷ்ட தொழில்நுட்ப ஆலோசகர் சுபாகரன், நிகழ்சித்திட்ட அதிகாரி எம்.ஐ.எம். வலீத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கல்முனை நகர அபிவிருத்தி திட்டம் மற்றும் மாநகரின் தேவைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. கல்முனை மாநகரினை அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியப்பாடு எமக்கு கிடைக்குமானால் உதவிகளை புரிவதாக கிறிஸ் அமைப்பின் பணிப்பாளர் ஜின்ஜோல்-ஜுல் தெரிவித்தார்.
Post a Comment