Header Ads



தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இருவர் கைது

சென்னை சேலையூரில் தங்கியிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் இருவரை தாம் கைது செய்துள்ளதாக பொலிசார்  தெரிவித்துள்ளனர்.

சென்னையில் வெடிபொருட்கள் தயாரிக்கப்பட்டதாக தொடர்ப்பட்ட வழக்கில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் 4 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மேலும் இருவரை தேடிவந்ததாகவும் அவர்கள் இருவரும் சேலையூரில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டதாகவும் சென்னை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது கைது செய்யப்பட்ட இருவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் என்றும் சென்னை போலீசார் கூறியுள்ளனர். அவர்கள் இருவரிடமும் கியூ பிரிவு பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். gtn

No comments

Powered by Blogger.