Header Ads



இந்தியாவில் அதிக அளவில் முஸ்லிம்களே வறுமையில்..!

(Ine) இந்தியாவில் அதிக அளவில் முஸ்லிம்களே வறுமையில் வாழ்வதாக மத்திய அரசின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

'இந்தியாவில் வசிக்கும் பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்பின்மை நிலை' என்ற தலைப்பில், நாடு முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டது. தேசிய மாதிரி கணக்கெடுப்பு கழகம் (National Sample Survey Organisation) நடத்திய ஆய்வில் இத்தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வின்படி முஸ்லிம்கள் தினமும் 32 ரூபாய் வீதம் மட்டுமே செலவிட்டு மிகவும் வறுமையில் வாழ்வதாக இந்த ஆய்வு கூறுகிறது. மேலும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் 37 ரூபாயும், கிறிஸ்தவர்கள் 51 ரூபாயும் தினமும் செலவிடுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

அதேநேரம் ஓரளவுக்கு நல்ல நிலையிலும் அதிக அளவிலும் சீக்கியர்கள் தினம் 55 ரூபாய் செலவிடுகின்றனர் என்று இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.