Header Ads



தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஊழியர் அபிவிருத்தி நிலைய கட்டடம் மீளமைப்பு


(யு.கே.காலித்தீன்)

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஊழியர் அபிவிருத்தி நிலைய கட்டடத்தினை மீளபுணர்நிர்மானம் செய்து திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப பேந்தர் கலாநிதி எஸ்.எம்.முஹம்மட் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வெளிவாரி பட்டப்படிப்புக்கான கற்கைநெறிகள் மற்றும் விரிவாக்க பயிற்சி குழுவினதும், பல்கலைக்கழகங்களில் உள்ள ஊழியர்களின் அபிவிருத்தி குழுவினதும் மற்றும் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் HTC ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் தவிசாளருமான பேராசிரியர் ஹரிச்சந்திர அவே குனவர்த்தன கலந்து கொண்டு இந்நிலையத்தின் நாடவினை வெட்டி திறந்து வைத்தார்.

மேலும் இந்நிகழ்வின் போது வெளிவாரி பட்டப்படிப்புக்கான கற்கைநெறிகளின் கல்வி நிலையமும் திறந்து வைக்கப்பட்டது.  

இந்நிகழ்வில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.முஹம்மட் இஸ்மாயில், பதிவாளர். எச்.அப்துல் சத்தார், ஊழியர் அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளரும் சமூக வஞ்ஞானவியல் தினைக்களத்தலைவருமான கலாநிதி எஸ்.எம். அஹமட் லெவ்வை,  H.E.T.C  நிலையத்தின் பணிப்பாளர் கே.எம். முபாறக், வெளிவாரி பட்டப்படிப்புக்கான கற்கைநெறிகள் நிலையத்தின் பணிப்பாளர் எம்.ஏ.எம். முஸ்தபா ஆகியோறோடு விரிவுரையாளர்களும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.


No comments

Powered by Blogger.