Header Ads



பைசர் முஸ்தபாவின் விளக்கம்

அஸ்ஸலாமு அலைக்கும்!

தங்கள் இணையத்தளத்தில் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்ட 'மஹியங்கனைப் பள்ளிவாசலின் நிலை புரிகிறதா?' என்ற தலைப்பிலான செய்தி தொடர்பாக..!

குறித்த செய்தியை பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா மறுத்துரைப்பதோடு, மஹியங்கனைப் பள்ளி  நிர்வாகி எனக் கூறப்படும் சீனி முஹம்மது என்பவரை தனது வாழ்நாளில் இதுவரை சந்தித்ததில்லை என்றும் அறுதியிட்டுக் கூறுகின்றார்.

குறித்த செய்தியின் உண்மைத் தன்மையை ஆராயாது பதிவேற்றம் செய்தமையையிட்டும், அதில் தன்னைச் சம்பந்தப்படுத்தி களங்கம் ஏற்படுத்தியமை குறித்தும் வருந்தும் அவர், குறித்த செய்தியில் அவரது நிலைப்பாடு சம்பந்தமான  மறுப்பினை பதிவேற்றம் செய்யுமாறும் வேண்டுகின்றார்.

சில்மி - 
பிரதியமைச்சரின்  அந்தரங்கச் செயலாளர்  

மிகமுக்கிய குறிப்பு

ஜப்னா முஸ்லிம் இணையானது செய்திகளின் உறுதிப்படுத்தலில் அதீத நம்பிக்கை கொண்டுள்ளது. அதற்கான அதன் அர்ப்பணிப்பும் அளப்பரியது. மஹியங்கனை பள்ளிவாசல் தலைவர் சீனி முஹம்மதுவை பிரதிமையச்சர் பைசர் முஸ்தபா சந்தித்தார இல்லையா என்பது எமது இணையத்திற்கு அவசியமற்றது. அத்துடன் இருவரும் சந்தித்தனர் என்று ஜப்னா முஸ்லிம் இணையம் ஒருபோதும் செய்தி வெளியிடவில்லை. இந்நிலையில் எதற்காக அவர் சார்பில் எமது இணையத்திற்கு இந்த மறுப்பு அனுப்பிவைக்கப்பட்டது என்பது மர்மமாக உள்ளது.

''மஹியங்கனைப் பள்ளிவாசலின் நிலை புரிகிறதா'' என்ற தலைப்பில் ஜப்னா முஸ்லிம் இணையம் செய்தி வெளியிட்டது உண்மை. அந்தச் செய்திக்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பிரதியமைச்ச பைஸர் முஸ்தபா மற்றும் தினகரன் வாரமஞ்சரி ஆசிரியர் செந்தில் வேலர் ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் இணைத்து வெளியிட்டோம். இதுவே யதார்த்தம்.


எங்கு, எப்போது, எது நடைபெற்றது என்பதற்கான மிக உறுதியான ஆதாரங்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் உண்டு. இது எல்லாவற்றையும்விட அந்த இறைவனுக்கு எல்லாம் புரியும்..!

முந்திய செய்தி
http://www.jaffnamuslim.com/2013/08/blog-post_5605.html

5 comments:

  1. என்னப்பா இது..?

    இரண்டு பந்திகள் மாத்திரமே கொண்ட ஒரு சிறிய செய்தியைக் கூட சரியாக வாசித்துக் கிரகித்துக் கொள்ள முடியாதவர்கள் எல்லாம் இந்த நாட்டில் பிரதியமைச்சராக இருப்பது..? வெட்கக் கேடு!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. silmy whats going on? Rafeek from booth.

    ReplyDelete
  3. குற்றமுள்ள உள்ளம் குறுகுறுக்கும்!!!!!!!!!

    2 வரி செய்தியில் இவர்களின் அரசியல் பலவீனம் புரிகிறது. இன்றைய முஸ்லிம்களுக்கு அரசியல்வாதிகள் குரல் கொடுக்கிறார்களோ இல்லையோ.. இந்த ஊடகங்கள் குரல் கொடுக்கின்றன என்பதை பைசர் ஹாஜியார் புரிந்து கொள்ளவும்

    ReplyDelete
  4. Mr Faiser mustafa then you tell muslim community what you did with Rajapaksha in the picture?

    ReplyDelete
  5. Faisar Mustafa what you trying to say.

    ReplyDelete

Powered by Blogger.