Header Ads



மாற்று சமூகத்தினருக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளல் தவறானது

இலங்கையில் இளைஞர்கள், வேற்றுமைகளை களைந்து சமூக மேம்பாட்டுக்கு உழைக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கோரியுள்ளார்

அதேநேரம் இலங்கை அரசாங்கம் தற்கொலை, தொழிலின்மை மற்றும் கல்வியில் அதிக அக்கறையை காட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இலங்கை விஜயத்தின் ஒருக்கட்டமாக அவர் இன்று இளைஞர் நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வில் உரையாற்றினார்.

தாம் இலங்கையிலுள்ள இளைஞர்கள் மற்றும் போரினால் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளவர்கள் தொடர்பில் அதிக அக்கறை கொண்டுள்ளதாக நவநீதம்பிள்ளை குறிப்பிட்டார்.

மதங்களை தவறாக பயன்படுத்தி இளையோர்களை பிழையான வழியில் இட்டுச்செல்லல், மாற்று சமூகத்தினருக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் போன்ற விடயங்கள் தவறானவை என்று நவநீதம்பிள்ளை சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் வகையில் கல்வி முறை மாற்றியமைக்கப்பட வேண்டும். இந்தநிலையில் இலங்கையை உலகில் சிறந்த நாடாக கட்டியெழுப்ப ஐக்கிய நாடுகள் சபை உதவும் என்றும் நவநீதம்பிள்ளை உறுதியளித்தார்.

No comments

Powered by Blogger.