தற்போதைய அரசாங்கம் தமது பைகளுக்கு பணம் கிடைக்குமென்றால் எதனையும் செய்யும்
இலங்கை பல்தேசிய நிறுவனங்களின் விபச்சாரியாக மாறியுள்ளதாகவும் தற்போதைய அரசாங்கம் தமது பைகளுக்கு பணம் கிடைக்கும் என்றால் எதனையும் செய்ய தயங்காத அரசாங்கம் என அரசாங்கத்தின் முக்கிய கூட்டணி கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
வெலிவேரிய ரத்துபஸ்வல சம்பவம் முதல் அண்மைகாலமாக நாட்டில் ஏற்பட்ட சம்பவங்களின் போது, அரசாங்கம் பல்தேசிய நிறுவனங்களுக்கு ஆதரவாவே செயற்பட்டது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்தில் இணைந்திருந்தாலும் அரசாங்கம் பல்தேசிய நிறுவனங்கள் கூறுவதையை அதிகமாக கேட்டு செவிமடுத்து வந்தது. அரசாங்கத்திற்குள் கசினோ வர்த்தகர்களே பலம்பெற்றுள்ளனர்.
வடமத்திய மாகாணத்தில் ஏற்பட்டுள்ள சிறுநீரக நோய் தொடர்பாக ஆராய முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம் இதுவரை செயற்படுத்தப்படவில்லை. அந்த நோயினால் இறப்பது முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை. விவசாய நிறுவனங்கள் இன்னும் விஷ கிரிமிநாசனிகளை விற்பனை செய்து வருகின்றன. இவற்றுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். gtn

நீங்கள் விஷக்கருத்துக்களை பரப்பாமல் சும்மா கிடைக்கிறதை சாப்பிட்டு இருந்தாளே போதும்,
ReplyDelete