அடுத்த கட்டம் என்பது எது..? ஆயுதம் ஏந்துவதா...??
அன்பின் இலங்கை வாழ் இஸ்லாமிய சொந்தங்களே !!!
எங்களை 24 முறையாக குட்டி இருக்கிறார்கள், அத்தனை முறையும் குனிந்து தான் போயிருக்கிறோம். கலந்துரையாடல் என்ற பெயரில் இம்முறையும் அல்லாஹ்வின் இல்லத்தை தாரை வார்த்திருக்கிறோம். கலந்துரையாடலின் போது தீர்கமாக பேசியிருக்க வேண்டும், மாறாக தாரை வார்த்துவிட்டு இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டோம் என்று அவர்களை பேசி தீர்க்க கூடாது. அவ்வாறு இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டால் காயை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி இருக்க வேண்டும், ஆட்டத்தை இடை நிறுத்தி இருக்க கூடாது.
முஸ்லிம் அமைச்சர்களை வைத்துக்கொண்டு இனிமேலும் அரசின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க முடியும் என்று எமது சமூகம் மனப்பால் குடித்தால்..... எம்மை போன்ற அடிமட்ட முட்டாள்கள் வேறு எங்கும் இருக்க முடியாது.
முஸ்லிம்களின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கவே இவை அனைத்தும் நடந்தேறுகின்றன. முஸ்லிம்களை ஒருபதட்ட நிலைக்குள் கொண்டுவந்து, முஸ்லிம் அமைச்சர்கள் அரசாங்கத்துடன் இருந்தால் தான் ஜனாதிபதியுடன் நேரடியாக பேசி அவ்வப்போது பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்ற ஒரு இக்கட்டான நிலைக்குள் தள்ளி, அரசாங்கம் எவ்வளவு தான் துரோகம் செய்தாலும் அவர்களை வெளியேற விடாமல் சதி வலை பின்னப்பட்டுள்ளது.
இதை எமது சமூகம் புரிந்து கொள்ளாத வரை எவ்வளவு தான் துள்ளி குதித்தாலும், கூக்குரல் போட்டாலும் நடக்கப்போவது எதுவுமில்லை.
இதற்கிடையில் BBC க்கு பேட்டி வழங்கிய ஒரு முஸ்லிம் அமைச்சர், எமது ஜனாதிபதி இன பேதம் இல்லாதவர் என்று வாய் கூசாமல் கூறியது மட்டுமில்லாமல் இதற்காக ஒன்றும் முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலக மாட்டார்கள் என்று இழித்துக்கொண்டே கூறிவிட்டு, முடிக்கும் போது EID MUBARAK என்று பெருநாள் வாழ்த்து கூறுகிறார். இவ்வாறான உத்தம புத்திரர்களையும் எமது சமூகம் சுமந்துள்ளது என்பது வேதனைக்குரிய விடயம் தான்.
முஸ்லிம் சமூகம் விழிக்கவேண்டிய நேரம் வந்து விட்டது... தருணம் வந்து விட்டது.... என்று எல்லா கட்டுரைகளிலும் எழுதுகிறோம்,,,பேசுகிறோம் ,, கேட்டு கேட்டு புளித்துப்போய் விட்டது,, ஆனாலும் இன்னும் நாம் விழித்தபாடில்லை. கேட்டு புளித்துப்போய் விட்டது,, ஆனாலும் இன்னும் நாம் விழித்தபாடில்லை.
24 வது பள்ளி உடைக்கப்படமுன்பே, பெருநாள் தினத்தில் இருந்து பள்ளிவாசல் உடைப்புக்கெதிராக கையெழுத்து வேட்டை நடத்தினோம். இன்னும் நடத்திக்கொண்டே இருக்கிறோம். அதை வைத்து என்ன சாதிக்கப்போகிறோம் என்று புரியவில்லை. அனால் கையெழுத்து வேட்டை முடியும் முன்னமே அவர்கள் கை வரிசையை காட்டிவிட்டார்கள். அடுத்த பள்ளியும் வேட்டையாடப்பட்டுவிட்டது.
இவ்வாறான ஒரு இக்கட்டான நிலையில் அடுத்த கட்டத்துக்கு எம்மை நாமே நகர்த்தாத வரை எமது இருப்பை எம்மால் உறுதி படுத்திக்கொள்ள முடியாது. இப்போது இருக்கின்ற கேள்வி அடுத்த கட்டம் என்பது எது?? ஆயுதம் ஏந்துவதா ??? இல்லை அகிம்சா வழியில் வீதிக்கிறங்குவதா?? இந்த இரண்டில் எந்த ஒன்றை தேர்ந்தெடுத்தாலும் மீண்டும் நாங்கள் அடிமட்ட முட்டாள்களே,, ஏனெனில் நாம் கடந்த கால வரலாறுகளில் இருந்து பாடம் படித்துக்கொள்ள வில்லை என்பதுக்கு இதுவே சான்று.
அவ்வாறாயின் எம்மத்தியில் இருக்கும் தீர்வு தான் என்ன
சகோதரர்களே!!
இலங்கையில் நாம் சிறுபான்மையினர் தான் ஒத்துக்கொள்கிறோம்.அனால் உலகிலேயே நாம் தான் பெரும்பான்மையினர். மற்றுமல்லாது பாரிய பொருளாதார வல்லரசுகளை வைத்திருக்கிறோம். அமரிக்காவில் சிறுபான்மையினராக வாழ்ந்தால் இவைகளை வைத்து சாதிக்க முடியாது தான், அதையும் ஒத்துக்கொள்கிறோம். அனால் இலங்கை போன்ற...சிறிய, பொருளாதார இஸ்திர தன்மை அற்ற, கடனுக்கு மேல் கடனாக முஸ்லிம் நாடுகளிடமே கையேந்துகின்ற, பெற்றோலை மானியமாக பெருகின்ற, சர்வதேச போர் குற்றச்சாட்டில் சிக்கி இருக்கின்ற ஒரு நாட்டை சர்வதேச அழுத்தத்துக்கு உள்ளாக்குவது என்பது முயன்றால் மிக இலகுவான காரியம். அனால் இதை தொடந்து தவற விட்டபடி கண்மூடித்தனமாகவே இருந்து வருகிறோம்.
இலங்கை தமிழர்கள், வெறுமனே 6 சதவீதம் தமிழர்களை கொண்ட இந்தியாவையும் புலம் பெயர் தமிழர்களையும் வைத்துக்கொண்டு ஐ. நா வரை சென்று அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள். 57 க்கும் அதிகமான பாரிய இஸ்லாமிய நாடுகளை வைத்துக்கொண்டு நாம் என்னதான் சாத்தித்து விட்டோம்?? அரசாங்கத்தை அங்கிருந்து பத்திரமாக கூட்டிக்கொண்டுதான் வந்தோம்.
தமிழர்களை போல் நிலைமைகளை சர்வதேச மயப்படுத்தி அழுத்தங்களை பிரயோகிப்பது மட்டுமே காலத்துக்கு பொருத்தமான, நியாயமான ,புத்திசாலித்தனமான தீர்வாக அமையுமே தவிர எமது அமைச்சர்களை வைத்துக்கொண்டு சாதிக்க நினைத்தால் எம்மை என்னவென்று சொல்வது.... குண்டூசியை வைத்துக்கொண்டு முல்லை மட்டுமே அகற்ற முடியும். அனால் நாம் அதை வைத்து அறுவை சிகிச்சை செய்யப்பர்கிறோம். ஆயுள் முழுக்க முயன்றாலும் அது நடக்கவே நடக்காது
அனால் இதற்கு நாமே முட்டுக்கட்டையாக இருக்கிறோம். தாங்கள் தான் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் தலைமை என்று சொல்லிக்கொள்ளும் ஒரு கூட்டம் பாரிய நாட்டுப்பற்றுள்ள ஒரு கூட்டமாக தன்னை அரசாங்கத்துக்கு மத்தியில் காட்ட எத்தனிக்கின்றது. நாட்டிற்குள் இருக்கும் பிரச்சனைகளை நாமே பேசி தீர்த்துக்கொள்வோம், எக்காரணத்தை கொண்டும் வெளியாலை உள்ளே விடமாட்டோம்.........என்கிறார்கள்
அது மட்டுமில்லாமல், ஒல்லாந்தர் காலத்திலும் எமது முன்னோர்கள் அவ்வாறு தான் நடந்து கொண்டார்கள். போர்துகேயர் காலத்திலும் அவ்வாறு தான் நடந்து கொண்டார்கள். ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெரும் போதும் அப்பிடித்தான் இருந்தார்கள் என்று வரலாறு பேசிக்கொண்டிருக்கிறார்கள்
ஆனால் அன்று ஏக்கர் கணக்கில் முஸ்லிம்களுக்கு பட்டயம் எழுதி கொடுத்தவர்களோ அல்லது செனரத் மன்னனோ அல்லது 2 ஆம் இராஜ சிங்கனோ இன்று இல்லை என்பதை மறந்து விட்டார்கள்..... இருக்கும் 2 பேச் நிலத்தில் இருந்தும் அடித்து துரத்துவதற்கு தயாரான அரசாங்கமே இருக்கிறது என்பதையும் மறந்து விட்டார்கள்.
அது போக முஸ்லிம்களின் இன ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்க என்றே உருவாக்கப்பட்ட எமது சூரா சபையின் வகிபாகம் இந்த பிரச்சினையில் என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. இன்ஷா அல்லாஹ் பொறுத்திருந்து பார்ப்போம். அவர்கள் அரசாங்கத்துக்கு மகஜர் கொடுப்பதை விட்டு விட்டு பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தலில் ஈடுபட்டால் பெறுபேறு நன்றாக அமையும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். அதற்கு பொருத்தமானவர்கள் உள்ளே இருப்பதாக தான் அறிகிறோம். இந்த செய்தியை அவர்களுக்கு எத்தி வையுங்கள்.
சமூகத்தின் இன்றைய தலைவர்களே!! எதிர்கால சந்ததியினருக்கு சிறந்ததொரு வழிகாட்டலையும், காத்திரமான கள நிலவரத்தையும் உருவாக்கித்தாருங்கள். அடித்தளத்தை இட்டுத்தாருங்கள். கோபுரத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்..... இன்ஷா அல்லாஹ் .

WELL SAID
ReplyDeleteMuslimkalai aayuzam enda waippaze; janazipaziyin illakku.
ReplyDeleteWho start? Who lead? where we meet?
ReplyDeleteஇதே முஸ்லிம்களும் இதே முஸ்லிம் அரசியல் வியாபாரிகளும்தான் இன்று இந்த அரசிர்க்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதோடு வாக்களிக்கவும் போட்டி போட்டுக்கொண்டு செயல்படுகின்றார்கள் இப்படியானவர்களுக்கு உங்களின் செய்தி ஏறுமா . தொப்பியும் , தாடியும் ,ஜுப்பாவும் போட்டவர்கள் அதிகம் பேர் இன்று அரசின் பக்கமுள்ளனர் யாரை நம்புவது அல்லாஹ்வும் எம்மை பாதுகாக்க மாட்டான் . எல்லோருமே முஸ்லிம் பெயரில் வாழ்கின்ற முனாபீக்கள் .
ReplyDeleteYou are a munafiq. Read what you wrote last. What you know about my lord.do pray do isthihfar writting such thing. Cos ur eeman weak thats y write such.here good muslims are there they will whats wrong in your writting.
Deleteஅல்லாஹ் விடம் தவக்கல் ஆரம்பிக்கவேண்டியதுதான்
ReplyDeletewe wish the writer
ReplyDeleteDear Mifraaz Shaheed
ReplyDeleteKindly don't agitate the muslim ummah in Sri Lanka, by giving aggressive heading and arguments. we all together have to make one mechanism how to tackle this issue. we have to seriously consider on this topic.
I do agfe with bro nafees.kindly do not make unwanted statemwnt admin kindly remove this article.this will make big wrong impression on muslims already they allegating on us. He write from china we living here. 90% budhist brothers know they to fighting agaist this type of thing. Do not only read tamil or among your friends post come out of the well. World is big. If wr muslim as one bro said must put infront of allah he know better. Thawakkulthu. Dont try to be card board hero.
Deleteஇந்த சகோதரரின் கருத்து நிச்சயமாக எம்முடைய முஸ்லிம் தலைவர்களுக்கு எத்தி வைக்கப்பட வேண்டும்.இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்கள் மிகவும் சரியானது. இது போன்ற பிரயோசனமான கருத்துக்களை நான் வரவேற்கிறேன்.
ReplyDeletejazaakkallah. wel said br...
ReplyDeleteமுஸ்லிம்களே இதுக்காக அல்லாஹ்விடம் துஆ பிராத்தெனை செய்து கொள்ளுங்கள்இதுதான் நமது ஆயுதம்.
ReplyDeletei am with mifras brother.
ReplyDeletepalli udaippu palli parikoduppu enpanavatrukkaha ungalodu sernthu naanum kavalaippaduhiraan. aanaal ithe palli udaippai enni ullukkul mahilchi kollum muslim peyar thaankihalai enna seiyappohireerhall
ReplyDeleteirunthu paarungal GRANDPASS PALLIYAI MOOLATHANAMAAKKI 'PALLI UDAIPPUKKAHA ARASUKKAHA WAAKKALIYUNGAL PORALIHALE' ENDRU WAAKKUHALAI EDUTHTH PINPU ATHE ARASIDAM MOTHTHA YAAWAARAM PANNATHTHAAN POHIRAARHALL ENENDRAAL
EATKANAVE INTHA saa....NAKKI...yaam KILAKKIL NALLA PALANAIK KODUTHTHIRUKKIRATHU.
முதன் முதலாக ஒரு சிறந்த கட்டுரையை வாசித்தோம், மாஷா அல்லாஹ் இதனை யாராவது சிறப்பாக ஆரம்பியுங்கள், நாமும் இயன்றளவு ஒத்துழைப்போம் (இன்ஷா அல்லாஹ்),
ReplyDeleteNo comments....we are not united to do anything...All are utter wastes even this article.
ReplyDeleteAll are bluffing with their ability even me.
ReplyDeletethe truth is shame to tell that we are not United.
The good example is MP-Aswar(Did he elected by votes)????
Endha Mp um valai illai ivar sonnathu 100/100 sariye I appreciate what he said and we have to take care Our mosques. Next time We don't want any muslim cangress mps we want only Assathsaliy .
ReplyDeletethere is a guy called muzammil , weerawangsa's ideology...
ReplyDeletelook at his views.
to whom he work for.
Look at most of the Muslim Politicians are corrupted.
can a corrupted heart can provide a leadership?????????
and we are still not attain a progressive development in the government nonadministrative representation.
we need more higher rank policemen and layers and intellectuals where this is our country no one can deny it what ever they tell.
Admin why dont you remove the artical nor change the heading do you know CiD and NIB closely watching these and give very good publicity. Kindly remove or rename. What ever come against unity of sri lanka so not post pls. I know whats going on there in CID
ReplyDeleteயாரது தமிழர்களை கூட்டுக்கு இழுப்பது, தமிழர்கள் என்னும் வார்த்தை நீங்கள் பாவிக்க முடியாது, தமிழ் பேசும் முஸ்லிம்களான நாம் மற்றைய இனத்தவரை போல் ......இந்த வசனம் தான் நீங்க பாவிக்கணும் .....இஞ்சபாருங்கோ ஹாஜி
ReplyDeleteநீங்க வேற நாங்க வேற. இதே வாய்கள்தான் , 'அவரு என்னசரி போர் ஒண்ட முடிச்சி வச்சிருக்காரு தானே அவர் தான் எங்கட அடுத்த ஜனாதிபதி' என்று சிலவருடங்களுக்கு முன் பொளந்து கட்டினது.
எப்புடி இலங்கையை மாட்ட வைக்கப்போகிரீர்களா ......? ஐயோ ஹா ஹா ஹா வைறு வலிக்குது இதனால் தான் நான் இந்த பக்கம் வரவதில்லை
அதெப்படி அப்படியே மாற்றி ஸ்டேட்மென்ட் விடுறீங்கோ ....?
இலங்கையை காப்பாற்றி விடுவதே நீங்களும் உங்கட வல்லரசுகளும் உங்கட பெட்ரோல் ஷேக்குகளும் தனே
அடி வலிச்சாதான் தெரியுதுபோல அடியின் வலி, சும்மாவா சொன்னான் தனக்கு வந்தால்தான் தெரியும் எண்டு
ஒரு சந்தேகம் விடுதலை புலிகள் பயங்கரவாதிகள் எண்டு சிங்களவனுக்கு முதல் பாய்ந்த்து பாய்ந்து கத்தினீர்களே அவர்கள் இருந்த காலத்தில் இப்படி சிங்களவன் உங்களுக்கு ஏதுவும் செய்ததில்லையே ,ஒருவேளை அவர்கள் எங்களுடன் உங்களையும் பாதுகாத்தார்களா (காத்தான்குடி பள்ளிவாசலை தூக்கிக்கொண்டு வந்திராதீங்கோ)
Kishor, innum thirundhalaya neenga, pasiyenru uthaviyavanin veettu naduvil malam kaliththavarhalthaan neengal. Marandhu poyitta palaiya history. Athu thaan thalaikkanam uchchaththil irukkum pothu narukkappattu vitteengaley. Sound kodukkuratha niruththinaal nallam thambi. Most of my friends are tamils but their hearts are pure and honest, not like yours.
DeleteThere are lots of media working internationally why do not people like you publish the articles with evidence about Sri Lankan Muslim and the racist activities of Baddish monks and the government against Muslim community in Sri Lanka instead writing article in Local News Papers
ReplyDeleteIf we are able to take this massage to each and everyone in our community we can achieve the result before the election.How is it possible? I feel every reader has to do something to spread this massage at least to their friends and neighbours on behalf of our community.
ReplyDeleteThere are lots of media working internationally why do not people like you publish the articles with evidence about Sri Lankan Muslim and the racist activities of Baddish monks and the government against Muslim community in Sri Lanka instead writing article in Local News Papers
ReplyDeleteIf we are able to take this massage to each and everyone in our community we can achieve the result before the election.How is it possible? I feel every reader has to do something to spread this massage at least to their friends and neighbours on behalf of our community.
ReplyDeleteMuslim arasial vathikalay nam kolvthuthan pirachinaiku mufiyuvarum
ReplyDeleteMuslim arasial vathikalay nam kolvthuthan pirachinaiku mufiyuvarum
ReplyDeleteDear Brothers,
ReplyDeleteNow a day’s our Sri Lankan Muslim Political Leaders are mostly concentrating their electoral victory & how to manage the link with Mr. MR Group.
Managing good link with Mr. MR Group getting some short of personal benefits ( Ministries, good government jobs for relatives & etc.)
We do not want to believe this politicians. If our Muslim politicians having a social mind of working, let them come out from this government.
But it will going to be happen why? That the reason early I said.
In Shaa Allah, one day each and every one answer regarding the Social Responsibility.
Brotherhood,
As a member of this Muslim Ummah we have responsibility to some short things.
Please ask Dua for our Ummah’s well being & express your feeling in a peaceful manner like who ever having link with medias (in any language).
Express within your colleges & family. Because each every As a member of this Muslim Ummah must educate regarding these kind of barbarians activities.
In shaa Allah, He will reply for everything.
Ya Allah, please forgive our sins & assure your Masjid’s security, well being of Muslim Ummah…
Aaameeen.
சகோதரனே உமது கருத்துக்க் அல்லாஹ் பூரண கூலி தரவேண்டும் ஆனால் எமது முட்டால் தலைவர்கள் இன்னும் அரசின் முள்ளை சூப்புவர்கள் தானே அது அரசியல் தலைவர்களாக இருக்கட்டும் அல்லது ஆன்மீகத் தலைவர்களாக இருக்கட்டும் எல்லாம் ஒன்றுதான் அரசுக்கு ஆமா போடும் சாமிகள் தான் இதற்கு சமூகத்தில் இருந்து புதிய தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும் இதை எவ்வாறு சமூகம் செய்யப்போகின்று சமூகமும் இன்னும் சிறுபிள்ளைத்தனமாகவே நடந்து கொள்கின்றது அல்லாஹ்வின் பள்ளியை உனத் பள்ளி எனது பள்ளி எனது சொல்லி சண்டைபிடித்துக் கொள்கின்றது அல்லாவின் பள்ளியை பாதுகாக்க வேண்டும் என்ற் இவர்கள் நினைக்கவில்லை
ReplyDeleteVery good article.
ReplyDeleteIts not worth full that we still kept trust on our Muslim parliamentarians or ACJU to take our problems to the international level.We have to find our Muslim intellectuals who are in touch with Muslim countries supporting SL by any means & any such supports should be stopped immediately.
Giving financial tight to the current government is the only way for better solution & simultaneously work for government change
Thus lets please work hard & share our thoughts to the public
Masha allah its very important lines for us.
ReplyDeleteMuslims think what we have to do for next step against these type of attacks by the religious group's
ReplyDeleteI would love to be part of those ppl who can take this to international arena and obviously i would feel pity over the people who still keep their faith in our politicians regardless of whether they represent a major political party or a religious one. Hence, its high time, we must replace the leaders as i blv none of them has the leadership quality, before that we should ensure that votes going only to a mulsim political party although they still are not the ideal one to represent us but by disregarding to vote against them could cost us dearly too since not choosing to vote will only weak our stand. Instead, we do not vote any muslims who ask for votes from a different political party but a muslim party.
ReplyDeleteThis should go as well as with the ACJU because their leadership doesn't try to unite our muslims together INSTEAD THEIR STUPIDNESS IS THE PRIME REASON FOR ALL THIS over halal row by giving certificates for items which actually doesnt needs a halal certificate.
Those who support either of them (Our political leader or the ACJU) should think seriously.
A change is what we need.
Dear Editor,
ReplyDeleteIt is a good article, with a bad "Head Line". So better to change the Head Line and keep the article. It is the need of the current time...! We can not be patient for every thing. If there is no reaction, there will be action will keep on coming on Muslims from these racist group..! We need to show our resistance in some of the way, which could be one as described in the article.
Dear Bro,
ReplyDeleteOne thing we all must realize is that each country has its own priorities and own agenda. If India helps Tamils it is only to advance India's own interest. Therefore, do not expect any foreign government to solve our problems, unless, that country has some advantages out of that transaction. This is the reality. Majority of Buddhist brothers are peace loving and fair. A small group of extremists, with the support of some powerful people in the government have unleashed this anti Muslim anti Christian activity to gain political benefits and to shift the attention away from public from many serious issues facing the country. Therefore, we should approach this problem with this broad view and device and strategy to counter this effectively.
வணக்கம் mohamed zacky yubunu suhood நண்பரே
ReplyDeleteஉண்மைக்கு எப்போதும் ஒரு கெட்ட பழக்கம் உண்டு அது சுடுவது.
நன்றாக சுட்டுவுட்டது போல், அடிப்படையில் நான் ஒரு இனவாதியுமல்ல, துவேசியுமல்ல JM இல் நிறைய இனவாதகருத்துகள் இட்டுள்ளேன் இல்லையென்று சொல்லவில்லை காராணம் அந்த வலி உங்களுக்கும் புரியவேண்டும் என்றுதான், நாம் இனவாதியாக இருந்துகொண்டு மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லமுடியாது தோழா.
உங்களுக்கு நல்ல தமிழ் நண்பர்கள் இருக்கலாம். எனக்கும் நிறைய இஸ்லாமிய நண்பர்கள் உண்டு ஆனால் நான் அவர்களை எப்போதும் நம்பி ஒரு காரியத்தில் இறங்குவதில்லை, ஆனால் அவர்கள் நம்ப நடக்கிறேன்
அதுசரி இங்கே JM இலேயே நிரந்தர படைப்பாக புலிகளின் குற்றங்கள், யாழ் வெளியேற்றம் என்று இணைத்திருக்கிறீர்களே, புலிகளே இல்லையென்ற பிறகு இந்த ஆக்கங்கள் எதற்கு, இதனை படிக்கும் ஒவொரு இஸ்லாமிய சகோதரனும் தமிழனை எதிரியாக பார்க்கத்தானே, மறந்துவிட்டதை மீண்டும் நினைவிலிருத்ததானே....நீங்களா இனவாதத்தை கண்டிப்பது ....?
வரலாறை மறக்கவில்லை நண்பரே, படுக்கவசதியில்லாதவனிடம் பாயை பிடுங்கிய கதைகளும், தமிழ் எல்லை கிராமங்களில் ஊர்காவற்படை என்ற பெயரில் நீங்கள் காட்டிய வித்தைகளும் எனக்கும் தெரியும்
நாம் இப்படியே மாறி மாறி கதைக்கலாம்,
நான் புலிகள் செய்தததை நியாயப்படுத்த வரவில்லை அவர்கள் செய்ததது மாபெரும் பாதகம் (காத்தான்குடி பள்ளிவாசல்) , உங்கள் கொள்கைகளை பார்த்து விளக்கம் கேட்கிறேன்
Sound விட வேண்டிய அவசியம் எனக்கில்லை நண்பரே
இதனை நீங்கள் உங்கள் அரசியல்வாதிகளை பார்த்து கேக்கவேண்டியது தானே
எங்கே மனிதரில் மாணிக்கமாக காட்டும் உங்கள் இஸ்லாமியரும் கடைசி தமிழ் கருவருப்பில் பங்குகொண்டீர்கல்தானே எத்தனை நாடுகள் மூலம் அவர்களுக்கு உதவினீர்கள் (பாகிஸ்தான்,ஈரான்), எங்கே உங்கள் மார்க்கத்தின் கோர்ப்பாடும் சீரிய சிந்தனையும்.....?
அழிந்ததெல்லாம் புலிகளா அவற்றில் சாதாரண மக்கள் இல்லையா...
மௌனமாகவும் உடந்தையாகவும் தானே இருந்தீர்கள், உங்களில் எத்தனை பேர் அதனை ஆதரித்து கருத்து வெளியிட்டீர்கள்....?
கிழக்கு மாகாணசபையில் அரசுக்கு எதிர்ப்பை காட்டுவதை விட்டு(ஒன்றுக்கும் உதவாத முதலமைச்சர் பதவி அது இரண்டாவது கதை), பேரம் பேசும் சக்தியாகவுள்ளோம் என்றீர்கள்.....?
இப்போது அதற்க்கு கூலி தருகிறார்கள்.....
இன்னும் அவர்களுடன் ஒட்டி உறவாடுங்கள் கூலி அதிகம் கிடைக்கும்
Best of Luck My Friend
ஒரு தமிழனாக சொல்கிறேன் சிங்களவன் எவ்வளவு முயன்றாலும் தமிழர் முஸ்லிம்களுக்கு எதிராக திரும்பமாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் மொழியால் சகோதரர்கள் ஆனால் உங்களுக்கு அநியாயம் நடக்கும் போது எங்களால் எதுவும் செய்யமுடியாது
சிந்தித்து செயல்படுங்கள் நண்பர்களே