சவுதியில் இலங்கை பெண் குளிர்சாதன பெட்டியில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டாரா? மறுக்கிறது தூதரகம்
சவுதி அரேபியாவில் இலங்கை பணிப்பெண் குளிர்சாதன பெட்டிக்குள் அடைத்து வைத்து சித்திரவை செய்யப்பட்டதாக வெளியான செய்தியை சவுதி அரேபிய தூதரகம் மறுத்துள்ளது.
அது தவறான செய்தி என சவுதி அரேபிய தூதரகத்தின் உயர் அதிகாரி ஒருவர் ´அராப் செய்தி´ச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
குறித்த இலங்கை பணிப்பெண்ணுக்கு அழைப்பாணை விடுத்து விசாரித்ததாகவும் அவரது உடம்பில் எரிகாயங்கள் சில காணப்பட்டதே தவிர உடல் நிலை சிறப்பாக உள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார்.
நிலங்கெதரகே தயாரத்ன என்ற பணிப்பெண் இலங்கையில் உள்ள தனது கணவருக்கு தொலைபேசி அழைப்பெடுத்து தனது வீட்டு உரிமையாளர் தன்னை குளிர்சாதன பெட்டிக்குள் அடைத்து கொலை செய்யும் நோக்கில் சித்திரவதை செய்வதாக கூறியிருந்ததாக தகவல்கள் வெளியாகின.
குறித்த இலங்கை பணிப்பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவரது உடல் நல்ல நிலையில் உள்ளதை வைத்தியர்கள் உறுதி செய்ததோடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அன்றைய தினமே அவர் வீடு திரும்பியுள்ளதாக தூதரக அதிகாரி குறிப்பிட்டுள்ளார். Adt
Post a Comment