இலங்கை பெண் சவூதி அரேபியாவில் படுகொலை - அமெரிக்கர் கைது
(ADT) இலங்கை பெண் ஒருவரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் அமெரிக்க பிரஜை ஒருவர் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க கிறிஸ்த்தவ பிரஜையான இவர் சவுதியில் இஸ்லாமுக்கு மதமாற்றம் செய்து கொண்டு இலங்கை பெண்ணை திருமணம் முடித்து வாழ்ந்து வந்துள்ளார்.
சவுதியில் வாழ்ந்து வந்த இந்த ஜோடிக்கு இடையில் பிரச்சினை ஏற்பட்டு தனது மனைவி காணாமல் போனதாக அமெரிக்கர் கூறி வந்துள்ளார்.
ஆனால் குழாய் ஒன்றில் திணிக்கப்பட்டிருந்த நிலையில் சீன பிரஜைகளால் இலங்கை பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.
இந்நிலையில் தனது மனைவியை கொலை செய்து எரிவாயு மற்றும் பெட்ரோலிய ஆய்வு பயன்படுத்தப்படும் ஒரு குழாய் சடலத்தை திணித்து வைத்ததாக அமெரிக்கர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த அமெரிக்கர் பணிபுரியும் எரிவாயு, பெற்றோலிய குழாய் நிறுவனத்தில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு சவுதி நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வருகிறது. வழக்கு விசாரணையின் போது சந்தேகநபர் மாறுபட்ட கருத்துக்களை கூறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதிகாரன் மரண தண்டனை குடுக்க மாட்டான்.ஏனனில் வருடத்தில் முக்காவாசி நாள் ஊர் சுத்த US தானே போவனும். கொல பன்ன US, Europe வீசா குடுக்க மாட்டான்.
ReplyDeleteகுற்றம் நிரூபிக்கப் பட்டாலும் அமெரிக்கரை தண்டிக்கவா போகிறார்கள் ...
ReplyDeleteமக்காள் இது உங்களுக்கு வந்த தண்டனடா. நீங்க அப்பாவி ஏழை றிசானாவிற்கு அநியாயமாய் மரண தண்டனை குடுத்துத் தண்டித்தீங்களே, இப்ப ஏலுமெண்டா இந்த அமெரிக்கனுக்கு மரண தண்னை கொடுங்கடா பாப்பம். இழகின இரும்ப கண்டாத்தான்டா கொல்லன் தூக்கி அடிக்கிற.
ReplyDeleteAS PER "SAUDI LAW" AMERICANS WILL NOT BE BEHEADED.!!!!!!!!
ReplyDelete