ஜப்னா முஸ்லிம் ஊடக அனுசரணை கிரிக்கெட் போட்டியில் அக்கரைப்பற்று ரஹீமியா சம்பியன்
(சுலைமான் றாபி)
ஜப்னா முஸ்லிம் ஊடக அனுசரணையில் நிந்தவூர் முத்தகீன் விளையாட்டுக்கழகம் நடாத்திய மின்னொளி மென்பந்து கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி கடந்த 26.08.2013ம் திகதி நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. சுமார் 44 அணிகள் பங்கு பற்றிய இச்சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டிக்கு தம்பிலுவில் ரேஞ்சேர்ஸ் மற்றும் அக்கரைப்பற்று ரஹீமியா ஆகிய அணிகள் தகுதி பெற்றன. ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடிய தம்பிலுவில் ரேஞ்சேர்ஸ் அணி 05 பந்து வீச்சு ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 24 ஓட்டங்களைப்பெற்றது. பதிலுக்கு துருப்பெடுத்தாடிய அக்கரைப்பற்று ரஹீமியா ஆகிய அணி 3.4 வது பந்து வீச்சு ஓவரில் ஒரு விக்கட் இழப்பிற்கு 25 ஓட்டங்களைபெற்று சம்பியனானது. இதேவேளை இடம்பெற்று முடிந்த மின்னொளி கிரிக்கெட் போட்டியில் முதன் முறையாக மூன்று பேர் அறைச்சதங்களினை பூர்த்தி செய்தார்கள் அதில் ஒலுவில் லெவன் ஸ்டார் அணி சார்பாக ஷிபான், நிந்தவூர் நெஸ்கோ அணி சார்பாக இன்பாஸ் மற்றும் தம்பிலுவில் ரேஞ்சேர்ஸ் அணி சார்பாக கண்ணன் ஆகியோர்களே அறைச்சதங்களினை பூர்த்தி செய்தார்கள். அணிகள் பெற்ற ஓட்ட எண்ணிக்கை வரிசையில் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக தம்பிலுவில் ரேஞ்சேர்ஸ் அணி சம்மாந்துறை நியூ சன் அணிக்கெதிராக 102 ஓட்டங்களினையும், குறைந்த ஓட்ட எண்ணிக்கை வரிசையில் நிந்தவூர் ரியல் இம்ரான் அணி சம்மாந்துறை SSC அணிக்கெதிரான போட்டியில் 18 ஒட்டங்களினைப் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை இந்த சுற்றுத்தொடரின் சிறப்பாட்டக்காரராக மசூத், மற்றும் சிறந்த பந்து வீச்சாளராக பாமா ஆகியோர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்த சுற்றுப்போட்டியின் இறுதிநாள் நிகழ்விற்கு பிரதம அதிதியாக நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர், விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எல்.அனஸ் அஹமட், மனிதவள முகாமைத்துவ அதிகாரி எஸ்.எம்..றியாஸ்டீன், வர்த்தகர் எம்.சி.சுபைர், சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ். சஹாப்தீன், நிந்தவூர் விளையாட்டு சமூக அபிவிருத்தி ஒழுங்கமைப்பின் தலைவர் ஐ.எல். இப்ராஹிம், கிராம சேவகர் எஸ்.எம்.ஐ. அசாதுல்லாஹ், கிழக்குப் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் பி.ரி.ஹசன், அனுசரணையாளர்கள், முத்தகீன் விளையாட்டுக்கழகத்தின் உறுப்பினர்கள் மற்றும் விளையாட்டுக்கழகங்களின் தலைவர்கள், போட்டி நடுவர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர். இறுதியில் வெற்றி பெற்ற அணிக்கு பத்தாயிரம் ரூபாவும் வெற்றிக்கேடயமும், இரண்டாம் நிலை பெற்ற அணிக்கு ஐயாயிரம் ரூபாவும் வெற்றிக்கேடயமும் வழங்கி வைக்கப்பட்டது.
முதன் முதலில் நிந்தவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற கிரிகெட் போட்டிக்கு ஜப்னா முஸ்லிம் ஊடக அனுசரணை வழங்கியது பெருமை. உங்களின் ஊடகம் முஸ்லிம்களின் விடயத்தில் பொறுப்பாக செயற்படுகின்றது. இது சம்பந்தமாக அறிவிப்பாளர்கள் அடிக்கடி ஜப்னா முஸ்லிமை பற்றி கூறினார்கள். இருந்தாலும் ஒரு கவலை நிந்தவூரில் இருந்து 24 அணிகள் கலந்து கொண்ட போதும் எந்த அணியும் இறுதிப்போட்டியில் கலந்து கொள்ளவில்லை. இவர்களிடம் ஒற்றுமை இல்லை. தான் மட்டும் ஆட வேண்டும் என்ற குறுகிய மனம் அனைவர்களிடமும் காணப்பட்டது. இதனால்தான் அநேக மான அணிகள் இம்ரான், லகான், கென்ட், முத்தகீன், சதாம், ரியல் இம்ரான் போன்ற அணிகள் வெளியூர் வீரர்களை சேர்த்து ஆடினார்கள். இவர்களுக்கு உள்ளூரில் வீரர்கள் இல்லையா? இவர்களாலே நிந்தவூர் அணிகள் அனைத்தும் தோற்கடிக்கப்பட்டன.
ReplyDeleteவெளியூர் வீரர்களை நாய்ர கொட்டைதான் முதன் முதலில் அறிமுகப்படுத்தி ஆரம்பித்து வைத்தான். இப்ப எல்லா நாய்களும் வெளியூர் எலும்புகளைக்கண்டால் வாலாட்டி அதுக்கு பின்னால் ஓடுகிறது. இந்த நாய்ர கொட்டைக்காகத்தான் ரியல் இம்ரான் என்ற அணி உருவாக்கப்பட்டது. இவரால் இப்போது ஊரில் பல அணிகளுக்கு இடையில் பிரச்சனை. சில அணிகளில் உள்ள நன்றாக செயற்படும் வீரர்களை இவன் போய் பிரித்து தண்ட அணிக்கு சேர்த்து விளையாடுவதனால் இப்ப அதிகமான பிரச்சனை வந்துள்ளது. இது மட்டுமில்லாமல் வெளியூரானுக்கு கூட்டி கொடுத்து 18 ரன்னுக்குள்ள Out ஆகியிருக்கான். இது ஊருக்குத்தான் அவமானம். இவண்ட தொழிலே இதுதான் அப்பத்தான் man of the match , man of the series எடுக்கலாம் என்பது அவனின் கனவு.