பௌத்தசிங்கள இனவாதத்திற்கு எதிரான தெவனகலை முஸ்லிம்களின் போராட்டம்..!
(Faizal M Mahroof)
"தெவனகலை பெளத்தர்களின் புனித பூமி . இந்தக் குன்றினைச் சுற்றி வாழும் முஸ்லிம்கள் இந்த புனித பூமியை ஆக்கிரமித்தவர்கள். சூழவுள்ள முஸ்லிம்களை தெவனகலையிலிருந்து விரட்டியடிப்போம். அத்ற்கு பதிலாக பெளத்தர்களை குடியேற்றுவோம்"
மேற்குறிப்பிட்ட சுலோகங்கள் கடந்த இரண்டு மாத காலமாக இனவாதிகளால் ஜபிக்கப்படும் வாசகங்களாகும். தெவனகலை குன்றில் அமைந்துள்ள் விகாரையில் "மைத்ரி சஹன பதனம " எனும் அமைப்பினால் கடந்த ஜூலை மாதம் 14 ம்திகதி மலை 3 மணியள்வில் நடாத்தப்பட்ட பொதுக்கூட்டததில் மேற்குறிப்பிட்ட விஷக்கருத்துககள் மட்டுமன்றி அல்லாஹ்தஆலாவை இம்சித்தும் கண்மணி ரஸூல் ( ஸல்)அவர்களை தூசித்தும் "புத்திக டயஸ்" என்பவன் ஒலிபெருக்கியை உபயோகித்து உரை நிகழ்த்தியதை சூழவுள்ள முஸ்லிம், முஸ்லிமல்லாத மககள் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
எனினும் பிரதேச முஸ்லிம் மக்களும் அரசியல் தலைவர்களும் மிகவும் பொறுப்புடன் நடந்து கொண்டனர். முஸ்லிம்களை வம்புக்கிழுத்து ஓர் கலவரத்தை உருவாக்கி அதன் மூலம் எமது உடைமைகளுக்கு பாரிய சேதம் விளைவிப்பதே அவர்களது நோக்க்மாக இருந்தது . இந்த வலைக்குள் விழாமல் தவிர்ந்து கொண்டனர்.
சகல பேதங்களையும் மறந்து தெவனகலையைச் சூழவுள்ள கடுகஹவத்தை , உயன்வத்தை அரசியல் தலைவர்கள் . உலமாக்கள் , தொழிலதிபர்கள் , பொதுமக்கள் அனைவரும் ஓரணியிள் திரண்டனர். உள்ளூர் சிங்கள் மக்களைப் பிரத்தியேகமாக சந்தித்து தமது வன்மையான கண்டனத்தை தெரிவித்தனர்.
மட்டுமல்லாது புனித ரமழான் நோன்பு நோற்ற வேளையில் விஷேடமாக இரவுத் தொழூகைகளில் துஆக் கேட்டனர். இலங்கை பூராக வாழும் மக்களுக்கு இதனை எத்தி வைத்தனர். இதன் போது மாவனல்லையை மையமாகக் கொண்டு அதனைச் சூழ்வுள்ள எமது முஸ்லிம் ச்கோதரர்கள் நல்கிய ஒத்துழைப்பும் உதவியும் நினைவை விட்டும் அகலாதவை . ஹெம்மாதகமை மக்களும் தோள் கொடுத்த்னர்.
அரசியல் தலைவர்களும் முக்கியஸ்தர்களும் ஒன்றினைந்து இவ்விடயத்தை ஜனாதிபதி அவர்களை கண்டியில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் சந்தித்து முறையிட்டனர்.விடயமறியக்கிடைத்த முஸ்லிம் ச்கோதரர்கள் இலங்கையின் நாலா புரத்திலிருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு சுகம் விசாரித்து துஆச் செய்து தைரியமூட்டினர்.
மேலும் சிலர் தங்களது சொந்த விடயமாகக் கருதி சிரமம் பாராது நூற்றுக்கணக்கான மைல்கள் பிரயாணம் செய்து தெவனகலை முஸ்லிம்கலை தேடிக்கொண்டு தொழிலதிபர்கள்,வழக்கறிஞர்கள், பல முக்கிய பிரமுகர்களுடன் வந்தனர். அவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களையும் தம்முடன் அழைத்து வந்து தெவனகலை முஸ்லிம்கள் பக்கத்து நியாயங்களை இலங்கை பூராகவும் பரப்ப அயராது பாடு படுகின்ற்னர். இது முழு முஸ்லிம் சமூகததுக்கும் மிகச்சிற்ந்த வழிகாட்டலாக அமைந்துள்ளாது.
இந்த வேளையில் ஜனாதிபதியின் பனிப்பின் பேரில் சப்ரகமுவ முதலமைச்சர் ஊடாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் விசாரனை நடாத்தப்பட்டு 'அனுர மஞ்சனாயக ' எனும் கலிகமுவ பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவனுக்கும் " புத்திக டயஸ்" எனும் இனவாதக் கயவனுக்கும் எதிராக ( 21/08/2003) மாவனல்லை நீதிமன்றில் பொலீசாரினால் வழக்குத் தொடரப்பட்டு இவர்கள் இருவருக்கும் தெவனகலைக்குப் பிரவேசிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நகர்வுகள் சமீப காலதிதில் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்கொள்ள் நமனைவரும் ஓரணியில் நின்று சாதித்த மிகச் சிற்ந்த திருப்பமாகவும், முண்ணுதாரணமாகவும் இன்னிகழ்ச்சித்தொடர் கருதப்பட வேண்டும் என்பது எமது அபிப்பிரயமாகும்.
எனினும் இது நீண்டதோர் பயணத்தின் ஆரம்பம் மட்டுமே முடிவல்ல என்பது நாம் அனைவரும் மற்க்கக்கூடாத உம்மையாகும்.
தெவனகலை முஸ்லிம்களுக்காக எழுதும் கைகளையும் , பேசும் நாவுகளையும், பயணிக்கும் கால்களையும், இறைஞ்சுகின்ற் உள்ளங்களையும் அல்லாஹ் பொருந்திக்கொண்டு நல்லருள் பாளிக்க வேன்டும்.எனவும்
சுய நலம் பாராது முன் நின்று முறைப்பாடு செய்து ,வாக்குமூலமளித்து , வாதாடியோருக்கும் அல்லாஹ் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் வழங்க வேண்டும்.. எனவும்
பேதங்களையும் , கெளரவமும் பாராது ஓரணியில் ஒண்றிணைந்து சொத்துக்களிலிருந்து செலவளித்து சமூகத்தை வழி ந்டாத்திய அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களுக்கும் மர்றும் அனைவருக்கும் அல்லாஹ் மென் மேலும் பரக்கத் செய்வானாக எனவும் தெவனகலையைச் சூழவுள்ள முஸ்லிம்க்ளாகிய நாம் உள்மாரப் பிரர்த்திக்கிறோம்
Allaa-hu Akbar
ReplyDeleteமனதார வாழ்த்துகின்றோம்
ReplyDeleteAmeen Allah akber.........
ReplyDelete