'எதிர்க்கட்சி பலவீனமாக உள்ளதால் ஆளும் கட்சியான எமக்கு சோம்பேறித்தனம் ஏற்படுகிறது'
பலவீனமான எதிர்கட்சி செயல்படும் போது, ஆளும் கட்சியும் பலவீனமாவதாக அமைச்சர் நிமால் சிரிபால டி சில்வா தெரிவித்துள்ளார். தம்மைப் பொறுத்தவரை இலங்கையில் பலமான எதிர் கட்சியொன்று இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இந்த கருத்தினை தெரிவித்தார்.
பலவீனமான எதிர்கட்சி தேர்தலில் போட்டியிடும் போது, ஆளும் கட்சியான எமக்கும் சோம்பேறித்தனம் ஏற்படுகிறது. இதனால் கட்சியும் உற்சாகம் இழக்கின்றது. எப்படியிருப்பினும், இந்த தேர்தல் ஆளும் கட்சிக்கு வெற்றியைத் தரும் தேர்தலாகும். ஏனெனில், ஐக்கிய தேசிய கட்சி எம்மைப்பொறுத்தவரை எதிர் கட்சியாக செயல்படவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார். sfm
அத்துடன் நாங்கள் இலங்கை வரலாற்றில் இல்லாதவாறு அடவடிக்காரர்களாக மாறிக் கொண்டிருக்கின்றோம்.அதை நிறுத்துவதானால் எதிர்க்கட்சி பலம் பெற வேண்டும்.
ReplyDelete