வாழைத்தோட்டம் அல்-மஸ்ஜிதுன் நஜ்மிய்யா மத்ரஸா ஹாபில் பட்டமளிப்பு விழா (படங்கள்)
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
நேற்று நோன்பு 27ஆம் இரவு வாழைத் தோட்டம் அல்-மஸ்ஜிதுன் நஜ்மிய்யா குர்ஆன் மத்ரஸாவில் குர்ஆன் மனனம் செய்த ஒன்பது மாணவர்களுக்கு மேற்படிப் பள்ளிவாசலில் ஹாபில் பட்டமளிப்பு விழா இடம்பெற்றது.
நேற்று நோன்பு 27ஆம் இரவு வாழைத் தோட்டம் அல்-மஸ்ஜிதுன் நஜ்மிய்யா குர்ஆன் மத்ரஸாவில் குர்ஆன் மனனம் செய்த ஒன்பது மாணவர்களுக்கு மேற்படிப் பள்ளிவாசலில் ஹாபில் பட்டமளிப்பு விழா இடம்பெற்றது.
பள்ளிவாசலின் தலைவர் என்.எஸ்.எம்.உவைஸ் மற்றும் உப தலைவர் அல்-ஹாஜ் இஸ்மத் ஆகியோரின் இணைத் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு எகிப்து நாட்டினைச் சேர்ந்த அஷ்-ஷெய்க் அல்-ஹாபில் அல்-ஹாரி மஹம்மத் மஃமூத் மற்றும் அஷ்-ஷெய்க் அல்-ஹாபில் அல்-ஹாரி அப்துல் மஜீத் அகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வில் மேற்படி மத்ரஸாவின் அதிபர் அல்-ஹாபில் அப்துர் ரஹ்மானிடம் ஓதிக் கற்ற ஹாபில்களான முஹம்மத் ரிபாத், முஹம்மத் பிலால், முஹம்மத் சப்ரான், முஹம்மத் ஹிஸான், முஹம்மத் அஸ்ரி, முஹம்மத் அஸாம், ஆகிப் முஸ்தபா, முஸ்தபா ரஸீன். முஹம்மத் ஸாதிர் ஆகியோர் எகிப்து நாட்டு பிரதி நிதிகளால் தலைப் பாகை சூட்டப்பட்டு பளிவாசல் நிருவாகத்தினரால் சான்றிதழ்களும் நினைவுப் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
ما شاء الله
ReplyDelete