Header Ads



கோத்தா நீதித்துறையை கட்டுப்படுத்துகிறார் - ஆங்கில ஊடகம் தகவல்

பாதுகாப்பு செயலர் நீதித்துறையை கட்டுப்படுத்துகிறார்; ஆங்கிய ஊடகம் செய்தி வெளியீடு பிரதம நீதியரசர் மொஹான் பீரிசைப் பயன்படுத்தி கோத்தபாய ராஜபக்ச நீதித்துறையை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதாக ஆங்கிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

இலங்கையின் பிரதம நீதியரசர் மொஹான் பீரிசின் ஊடாக உயர்நீதிமன்றத்தை பாதுகாப்பு செயலாளர் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றார். அதன்படியே செயற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டுவருகின்றது என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. மேலும் குறித்த ஊடகம் தெரிவிக்கையில், தற்போது பிரதம நீதியரசராக உள்ள மொஹான் பீரிஸ் முன்னர், பாதுகாப்பு அமைச்சின் ஆலோசராக இருந்தவர். இந்த நிலையில் அவரை பயன்படுத்தி கோத்தபாய ராஜபக்ச நீதித்துறையை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார். 

மேலும் புகைப்பிடித்தல் நிறுவன வழக்கு ஒன்று அண்மையில் இடம்பெற்றபோது கோத்தபாயவின் ஆலோசனையின் பேரில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸே குறித்த நிறுவனத்தின் சார்பில் சட்டத்தரணிகளை நியமித்துள்ளார். அத்துடன் அரசியல் சம்பந்தப்பட்ட வழக்குகளின் போதும் இவர்கள் இருவருக்கும் இடையில் சந்திப்புக்கள் இடம்பெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக குற்றவியல் பிரேரணையை கொண்டு வந்தமை மற்றும் அதற்காக புதிய பிரதம நீதியரசர் நியமிப்பு என்பன பாதுகாப்புச் செயலரின் ஆலோசனைக்கு அமையவே எனவும் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

1 comment:

  1. மோஹான் பீரிஸ் ஐ அப்பதவிக்கு நிறுத்தியதே இவர்களது நாடகங்களையும் கொள்ளைகளையும் அரங்கேற்றி இவர்களை நியாயப்படுத்துவதற்காகவேதானே. இப்படியிருக்க கட்டுப்பாட்டுக்குள் வராமல் எப்படி போகும் முதல் நிபந்தனையே அதுதானே “எமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கவேண்டும்”

    ReplyDelete

Powered by Blogger.