கொழும்பில் பெருநாள் விற்பனை சூடுபிடிப்பு (படங்கள் இணைப்பு)
(ஏ.எல்.ஜுனைதீன்)
புனித நோன்பு பெருநாள் தினம் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் முஸ்லிம் ஆண்களும் பெண்களும் வெளி இடங்களிலிருந்து கொழும்பின் பிரதான நகரங்களுக்குப் பெருந்திரளாக வருகை தந்து பெருநாளைக்குத் தேவையான புத்தாடைகள், தொப்பிகள், இனிப்பு வகைகள் மற்றும் மருதோன்றி என்பன போன்ற பொருட்களை ஆர்வத்துடன் வாங்குவதைக் காணக்கூடியதாக உள்ளது.
கொழும்பு மாநகரத்திலுள்ள கடை வீதிகள் மக்களின் கூடுதலான நடமாட்டத்தால் போக்கு வரத்துக்கு நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.
Post a Comment